Jun 27, 2011


காதில் கடுக்கண்,
கண்ணில் கலர் லென்ஸ்,
பிருவம் துளைத்து வளையம்
காதிலும் வளைந்து....

முன்குறிப்புடன் பனியன்
பின்னங்கீற்று தெரிய பேன்ட்
பிடரியின் கீழ்வரை மயிர்
கையில்லாதவனும்
அடிக்க நினைக்கும் முகம்,

தேய்த்துப் பழக்கமில்லாத சட்டை
அதில் சும்மா இரண்டு பொத்தான்கள்
இடுப்பை இறுக்காத பெல்ட்
கர்மம் என்னத்துக்கோ என தொங்கும்
முன்னாலே...

தீய்ந்துபோன வயிறு
தேய்ந்து போன தோள்பட்டை
அதில் தூக்கு மாட்டும் அளவுக்கு
நீளத்தில் ஒரு பை,

இரண்டு புத்தகம்,
15 சி.டி க்கள்,
கிரியேஷனும் பாதியில்
இம்ப்ளிமென்டேஷனும் பாதியில்

ராத்திரியில் கப்பும்
நடு சாமம் வரை பப்பும்,
குட்டிகள் சிலநேரங்களில்
சிலருடன் - கேட்டால்
கேள் பிரண்ட்,
கேட்காவிட்டால் எந்த பெட்டோ....

நுனி நாக்கில் ஆங்கிலம்
ரோட்ல எவனாவது
பிச்சை கேட்டா மட்டும்
தள்ளக்கும் தகப்பனுக்கும்
தானா வரும்...

தூங்காம பேஸ் புக்
தூங்கி தூங்கி
பீஸிபிள் புடுங்கணும்,
இதுக்கு லகரங்களில் சம்பளம்

வீட்ல கேட்டா
சாரிம்மா இனி எதுவும் கேக்காத
நான் MBA ஜயின் பண்ணீருக்கேன்...

அம்மா பொண்ணு பாத்து வப்பா
கால் காசுக்கு தேறாத சுபாவம்
ஒண்ணேகால் கிலோ தங்கம்
கேக்கும்...

சைக்கிள்ள ஏத்தினாலே
கொய்யால பத்து தபா கழுவணும்
இவனுக்கு ஸ்கோடா கார்
கேக்கும்....

இவன நம்பி பொண்ண குடுக்கிறவன்
நேந்துதான் குடுக்கணும்
குடுக்கிறவனுக்கென்ன
பையன் ஐ.டி.யா.? வாங்குறது லகரமா
அவ்ளவுதான்...
அவன் கன்னியா..!!!
துலாமா எதுவும் வேண்டாம்...

இவன்தான்
இன்றைய ஐ.டி ஊளியன்...

எல்லாரும் இல்லப்பா
இப்படி இருக்கிற பலரைப்பற்றி
சொல்றேன்....

மனசு வலிச்சா திருந்திரு...

இல்லண்ணா
எழுதுன என்னைய திட்டீரு....

அன்புடன்

குளச்சல் ""அபூ ஃபஹத்.""

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...