Dec 29, 2012

உப்பா.....!!


ஒரு மின்னலப்போல
வந்து போவுது கண்ணுல - அந்த
தலைப்பாயும் மடிச்சிகெட்டும்
 கோவத்துல பாக்கறபார்வையும்.....

காலைல காப்பிக்கு
முன்னால சொம்புல
பழங்கஞ்சி வெள்ளம் வேணும் - கூடவே
மரிச்சினி கெளங்கிருந்தா
பச்சமொளவும் வேணும்....

விடிகாலையில தலையில
சுத்துற தலைப்பா - மத்தியானம்
பசியாறி முடிஞ்சவுடனே
கொஞ்சம் சாஞ்சி படுக்கும்போதுதான்
களட்டி தலைக்கு வைக்கும்....

பாக்கு வெட்டுறதுக்குணே
மடியில வச்சிருக்கும் ஒரு
மடக்கு பேனா கத்தி - வீட்டுல
குழந்தையோ அழுவணி கண்டா
பேனா கத்தியால பேடி காட்டும்....

 நைஸான கை பனியன் 
 போட்டாத்தான் அழகு - வேட்டி 
எப்பவும் வெள்ளையாத்தான்
புடிக்குமுண்ணாலும் அடிக்கடி
சிங்கப்பூர் பாலிஸ்டர்
சாரமும் உடுக்கிறதுதான்....

அடி மடி எப்பவும்
கனமாத்தான் இருக்கும் - வாழை
தடையில பொதிஞ்ச போயிலயும்
சின்ன வெத்திலை பொதியும்
ஒரு சுண்ணாம்பு டப்பாவும்....

தட போயிலக்காக ஒரு
பர்லாங்கு தூரம்
வேணும்ணாலும் போவாரு - ஆனாலும்
யாப்பாண போயிலைய தொடமாட்டாரு....

மடிச்சிகெட்டுற பயலுவளை புடிக்காது
மரியாதை இல்லாதவனுவோ - ஆனா இவரு
மடிச்சி கெட்டுனா மரியாதயோட
பாக்கணும் ஊரெல்லாம்...

கடப்புறத்துல போய்
மணிக்கணக்கா இருப்பாரு - அரை
மணிக்கூறு வீட்டுல அடங்கி
இருக்கமாட்டாரு....

ஆசாரியோ கொத்தனாரோ
டெய்லரோ பெய்ன்டரோ நம்பிக்கை
சுத்தமா கொறவுதான் - ஆயிரம் தடவை
அளந்து அளந்து அதட்டுவாரு....

இண்ணக்கி வரை யாரும்
சொல்லாதுங்கோ வேற
ஒரு பெண்ணை
நிமிந்து பாத்தாருண்ணு - வெக்கம்
ஒண்ணுமில்லை ஆனாலும்
அப்படி ஒரு நல்ல மனுஷன்.....

சொம்புல தண்ணி எடுத்து
அண்ணாந்து வாய்
கொப்பளிப்பாரு - ஆயிரம்
கண்ணுவேணும் அழகை பாக்கறதுக்கு
செவப்பு நாக்கும் வெத்திலை
கறை படிஞ்ச பல்லும்....

ஒண்ணா வாழ்ந்து முடிச்சது
நாப்பத்தஞ்சி வருஷம் - மரிச்சி
பந்திரண்டு வருஷமாச்சி...

இப்பவும்
ஒரு மின்னலப்போல
வந்து போவுது கண்ணுல - அந்த
தலைப்பாயும் மடிச்சிகெட்டும்
கோவத்துல பாக்கறதும்.....


____

அன்புடன்
வாப்பும்மாவின் அழகு நினைவுகளாய்

பேரன்....

 அபூ ஃபஹத்

1 comment:

  1. Very good one Abu! There are not many people observe their grand parents liek this and take pride in writing about them. I am someone who respect elders and consider them knowledge treasure. I had spent lot of time with my grandparents and miss them often. Your poem reminded me both my thathas.

    ReplyDelete

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...