இமைகளுக்குள் பரந்து கிடக்கிறது
அமாவாசையாய் கருவிழிகள்
அதில் பிரதிபலிப்பதெல்லாம்
பளிச்சிடும் பெளர்ணமிகள்....
நொடிப்பொழுதுளில் துடித்தடங்கும்
இமைகள் பேசுவதோ
ஒரு கோடி பாசைகள்
கோபத்தைச் சொல்கையில்
இரத்தச்சிவப்பதும்
தாபத்தில் கண்ணீர் சொரிவதும்
புன்னகைக்கையில்
மலர்ந்து விடுவதுமாய் இடமறிந்து
எதார்த்தமாகிறாய்...
கொடியிடையாய் குமரிகள்
செல்கையில் ஒரக்கண் பார்த்து
அவள் புன்சிரிப்பை
இமையகப்படுத்தி உன்னையே நீ
அழகு பார்க்கிறாய்....
தந்தையென்றால்
இமை தாழ்த்தி மரியாதை செய்வதும்
தாய் என்றால் கருணைப்பார்வையால்
கெஞ்சுவதும் இங்கிதம்....
தூசு கண்டால் கண் அடைக்கும் நீ
வாள் முனையை உன்
பார்வையால் தூசாக்குகிறாய்...
நல்லவை அல்லவை என
பிரித்தறிந்து பார்ப்பதில்லை
எனினும் பகுத்தறிய துணைபோகிறாய்.....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...