படிப்பறிவு அதிகம் உள்ள சனம் – ஆனால்
எல்லாம் அரை குறைதான்,
உலகமே உள்ளங்கையில் என்பர் – நல்ல
விலை கிடைத்தால் விற்றும் விடுவர்..
நிலவில் கால் வைக்கும் வரை
ஆம்ஸ்ட்ராங் யாரென்று தெரியாது – கால் வைத்து
திரும்பியபோது அவன் மலையாளியோ எனும்
சந்தேகம் கேரளாவில்
இன்றும் தினப்படி சர்ச்சைதான்....
ஆழிப்பேரலை ட்சுனாமி
ஆய்ந்தடித்தபோது அழிந்துபோன மக்களில்
மலையாளிகள் குறைவாம் – இது ஒரு
மலையாளிக்கு அபிமானம்....
ஆஷ்கார் விருது அறிவிப்பு வந்தது,
கேரளாவுக்கு ஒன்றும்
இந்தியாவுக்கு இரண்டும் – அந்த
இரண்டும் கூட தந்தை வழி கேரளாதானாம்...
உலகப் பொருளாதார மையம்
தகர்ந்து வீழ்ந்தது அமெரிக்காவில் – எல்லா
மலையாள ஊடகமும் நேரலையில்
கேட்டது மரிச்சதில் இந்தியக்கார் எத்றா
மலையாளிகள் எத்தறா....
20க்கு 20 உலகக்கோப்பை
மலையாளியாய ஸ்ரீசாந்த்
இல்லாவிட்டால் இந்தியா கேரளாவிடம்
தோற்க வேண்டும்...
50 க்கு 50 உலகக்கோப்பை கிறிக்கெட்
இந்தியா கிரீடம் வென்றது –
மலையாளியாய ஸ்ரீசாந்த் பைனலில்
எறிஞ்சு, இந்தியா ஜெயிச்சு.....
ஸ்ரீசாந்தா கொக்கா....
உலகில் எந்த விருது யாருக்கு
வழங்கப்பட்டாலும் அவனின்
ஏதாவது ஒரு தலைமுறை
மலையாளியாக்கப்படும்.
தமிழனுக்கு கேரளாவில் பெயர்
பாண்டி – ஆனால் பாண்டியின்
லாறி படுத்துவிட்டால் பால் கூட
பாண்டியாடும் கேரள அடுப்புகளில்....
வளைகுடாவில் எங்கு பார்த்தாலும்
கேரள முதலாளிகள் – அவர்களின்
கணக்குகள் பார்க்க மட்டும் தமிழக
அறிவு ஜீவிகள்....
எவன் தலையை மிதித்தும்
மேலே போவான் - எந்த
தடையும் ஒரு தடையில்லை - ஆனால்
கடைசி தடையில் மட்டும் தோற்றுப்போவான்
அதைதாண்ட முடியாது, அது
அறிவுத்தடையல்லவா – அங்கே எசமானன்
தங்கத்தமிழனல்லவா.....
உயர உயரப் பறந்தாலும்
ஊர் குருவி பருந்தாகுமா –
எவ்வளவு பாரை வைத்தாலும்
மெத்தப்படித்த தமிழனைத்
தாண்ட முடியுமா...
அறிவுக்கும் பொருளுக்கும்
போர் வந்தால் பொருள்தான்
பொசுங்கிப்போகும்...
எதை விற்கவேண்டும்
என்று தெரிந்து விற்பவன் வியாபாரி...
எதையும் விற்று காசு பார்த்தால்அவன் மலையாளி –
ஆனால் உலகம் வியக்கும் அவன்
ஒற்றுமையை
உலகம் தோற்கும் அவன் இன பாசம்
முன்னால்
உலகம் தோற்கும் அவன் அன்புக்கரம்
முன்னால்...
பாரதி கண்ட ஒற்றுமை கேரளக்கரையில்
மலர்ந்து பந்தலித்திருக்கிறது...
அன்பு காட்டினால் உயிரையும் கொடுப்பான்
மலையாளி
ஆப்பு வைக்க நினைத்தால்
மவனே உனக்கு
ஆப்பிளே தருவான் ஆப்பாக....
அன்புடன்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...