எனது ஒரு சிறு கதை கவிதை வடிவில்
பிடித்திருநத்தால் பதில்களை கேள்விகளாக்குங்கள்...
சேட் றூம்
"ஹாய்" என்றான் -நானும் தான்
"ஹாய்" சொன்னேன்
நொடிகளில் அடுத்த கேள்வி
"எப்படி இருக்கீங்க" என்று...
யோசிக்கவே இல்லை நான்
"நலம்" என்றேன் - நீங்கள்..?
என்பதற்குள் அடுத்து வந்தது
கேள்வியா..? பதிலா.?
சுவாரஸ்யமான அந்த வரிகளுக்கு
என் இதயம் பதிலை மட்டும்
சொல்லச்சொன்னது - ஏன் என்ற
கேள்வியை கேட்க அனுமதிக்கவே இல்லை....
"நீங்கள் இருக்கீங்களா..?""
அடுத்த கேள்வி - பரிச்சயமில்லாதவன்
ஆனால் மிகவும்
பரிச்சயமான வார்த்தைகள்..
எனதாகிய சில கேள்விகளை
அந்த வார்த்தைகள் அலட்சியப்படுத்தின
என் மனம் நொடிப்பொழுதில்
சில பல கேள்விகளை தாண்டி
என்ன செய்றீங்க என்றது...
யாரென்று கேட்கவுமில்லை,
எங்கிருந்தென அறியவுமில்லை,
ஆண் என தெரிந்தபோது
புகைப்படத்தின் அழகு மட்டுமே
கண்ணில் நின்றது.....
நல்ல பெயர் என்ற அவனின்
பாராட்டு வைரங்களாய்
மின்னியது - என் விரல்கள்
அளவு கடந்து முத்தமிட
துடித்தது அந்த போக வரிகளை....
விரல் நுனியில் நகங்கள்
பளபளத்தன - பற்களின் இடையே
விறைத்தன நகங்கள்
கடித்து துப்பிய நகங்களில் இரத்தத்தின் நிறம்
அடுத்த வரியை எதிர்பார்க்கும்
இதயத்தின் சிதறல்கள்.....
""ஓவர்சீஸ் ப்றாஜக்ட் ""
புதிய வரிகள் - ஆனால்
வெளிநாடு பற்றிய வார்த்தைகள்
ஜிவ்வென ஏறியது எனக்கு
இருபது கேள்விகளை என் மனது
கேட்க மறந்தே போனது....
அவன் அழகும் எனக்கு
அவன் அறிவும் எனக்கு
என நானே அனுமானித்த
அழகிய உலகமானேன்....
இன்னும் கொஞ்சம்
புதியவளானேன் - ஒரு
பழைய கேள்வியை புதிதாய்
கேட்டேன்
""இப்போ எங்கே இருக்கீங்க""
"சென்னைக்கு நாளை
வந்துவிடுவேன்" -அவன் பதில்.
"நியூ யார்க் விமான நிலையம்
உண்மையிலேயே அழகுதான்.."
கூடவே ஒரு புதிய தகவலாய்...
நான் புரிந்துகொள்வதற்காகவா,
எனை அறிவிப்பதற்காகவா
எனக்கு புரியாமல் போனது அந்த பதில்....
ஆனால் அவனின் அமெரிக்கா
எனக்கு பிடித்துப்போனது.....
ஒரு பதில்
இரண்டு புரிதல்கள்...
நான் சொல்லக்கூடாத
யாரிடமும் இதுவரை எதார்த்தத்தோடு
பேசாத வார்த்தைகள் - "எனக்கு
பிடித்திருக்கிறது உன்னை...."
இது நான்...
சில கணங்கள் நான்
என்னை அறியாமல் ஆனேன்..
அவனை தெரியாதபோதும்
எனக்காய் அவனை தெரிவு செய்தேன்....
யாருமில்லை என் அருகில்
பரிசம் நானே போட்டுக்கொண்டேன்
பாசம், நேசம், பந்தம் எனக்கு நானே
ஆக்கிக்கொண்டேன்....
என் திரைகளில் சிலநிமிடங்கள்
பதில் வராததை என் விழிகள்
விளங்க மறுத்தன...
என் கண்களை நான் கோபித்தேன்....
""காத்திருப்பில் விருப்பமில்லை""
அவன் என் கண் பார்த்து
சொன்னதாய் உணர்ந்தேன் - என்
ஆட்காட்டி விரல் அவனை அப்படியே
பார்க்கச்சொன்னது...
அதனால் தானோ என்னவோ
சுயம் மறந்து தட்டச்சியது
என் விரல்கள் "'சந்திக்கலாமே"' என்று....
"கண்டிப்பாக" என்ற அவன்
வரிகளை மீண்டும் மீண்டும்
வாசித்து உறுதிமொழியாக்கியது
என் உதடுகள்......
"ஸ்பென்சரில் காஃபி ஷாப்பில்
சந்திக்கவேண்டும்"" அவன் சொன்னான்
நான் போய் சேர
ஒரு முழு நாள் பயணம் - அறியாத
ஊர் தேடி தெரியாத அவனை காண
என் வீடே, என் ஊரே யாரும் அறியாமல்
ஒரு பயணம்....
அவன் வருவதற்குள்
காஃபி வந்தது -நான்
தொடுவதற்குள் எதிரே ஒருவன்
அவ்வளவு அழகாய் இல்லை
எனினும் நான் சொல்லிவிட்டேன்....
சார் என் கணவர்
வருவார் என்று - சிறிது
என் கண்களை சுற்றவிட்டேன்
யாரும் சந்தேகப்படவில்லை....
நான் பார்க்காத என்னவனை
தேடும் எனக்கு எதிரில் சிரிப்பவனை
பிடிக்கவில்லை....
தாடியும் வகிடெடுத்து சீவிய தலையும்
அவன் கைப்பையும்
மரியாதை செய்யவைத்தது எனினும்
அவனை அவனாய் நினைக்க முடியவில்லை.....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...