Feb 23, 2012
எனது இரவுகள்....
தூக்கம் வரவில்லை எனக்கு
இடது பக்கமாய் புரண்டு படுக்கிறேன்
வலது பக்கமும்தான்..
தலையணை வைத்தும்
கைகள் தேவைப்படுகிறது
தலைக்குப்பின்னால் சில
தவிற்க முடியாத உறவுகள்போல்..
வானவெளியை உற்றுநோக்கிய
இரவுகளும் நட்சத்திர எண்ணல்களும்
மறந்துபோன என் அறையில்
எண்ணிலடங்கா சிந்தனைகள் - எனினும்
வான வெளியும் நட்சத்திரங்களும்
அதே இடத்தில்....
கால ஓட்டத்தின் நடுவில்
நட்சத்திரங்களையும் வான் வெளியையும்
பார்க்கவே இல்லை நான்
சில பல நாட்களாய்..
யாரும் மழை பற்றிக்கேட்டால்
வானம் பார்க்க தோன்றவில்லை,
வானொலியோ தொலைக்காட்சி செய்தியோ
மழையை தீர்மானிப்பதால் - பல
நேரங்களில் இறை மறந்த செய்திகளில்
மழை பொய்த்ததும் உண்டு....
கால்களை பின்னச்செய்து
கைகளை கோர்த்த வண்ணம்
சுருண்டு படுத்தும் கண்கள்
தூங்க மறுக்கிறது - காரணம் தெரியாமல்
மனதில் இழையோடும் எண்ண ஓட்டங்கள் ....
இயற்கையின் வெளிச்சங்களை
ஏனோ தொலைத்துவிட்டு
செயற்கை விளக்குகளில்
இரவைத் தேடுகிறேன்....
காலம் சென்றவர்களும்
சம காலத்தவரும் ஒரு சேர
பயணிக்கும் எனது கனவுகள்
சில நேரங்களில் பயமாய்
பல நேரங்களில் இதமாய்....
இறகுகள் போல் இதமாய் வருடும்
தென்றலை தொலைத்துவிட்டு
மின் விசிறியின் வெப்பக்காற்றில்
தினம் தினம் இழமையை இழக்கிறது
எனது இமைகள்....
ஏதோ தூங்காத விழிகள்தான் எனினும்
விடியல்களை பார்த்ததே இல்லை
எனது விழிகள் - காலம் கடந்த
தூக்கத்தால் கடமைகளை
இழந்து போயினேன்.....
வெட்ட வெளியில் தூங்கியபோதும்
நினைவில்லாமல் நடந்ததில்லை
அறைகளுக்குள் அடைபட்ட பின்
மணிக்கொருமுறை நினைவுகளோடு
இரவுகளை நடந்தே தீற்கிறேன்....
மறந்துபோன இரவுகள்
கடந்துபோன கனவுகள்
நடந்து தீர்த்த பாதைகள்
எதுவும் நினைவுகளில் பதியாமல்
ஒரு மயான அமைதியுடன்
இரவுகளைத்தேடி....
அன்புடன்
அபூ ஃபஹத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...