வெறுமை......
-----------------
சாலைகளில் எங்கும் வாகனங்களை
காணவில்லை - விலை உயர்வை
கண்டித்து ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தமாம்..
போருந்து நிறுத்தங்களின் வெறுமை
கனவுகளோ நினைவுகளோ இல்லாத
வாழ்க்கை தவறிப்போன
மன நோயைளியின் இரச்சலற்ற தூக்கம்
அவன் அறிந்திராத ஒரு நாள் நிம்மதி......
சிற்றுண்டி கடையின் குப்பைத்தொட்டியை
துளாவும் முதியவர் – நேற்றைய
எச்சில் இலைகளில் ஏது ஈரம்
பசியிலும் சிரிக்கும் பிதா மகன்....
அழுக்கு கைலியும் வெற்றிலை
பற்களுமாய் நேற்றைய முழுக்கூலியுடன்
கூலித்தொழிலாளி - பூட்டப்பட்ட
டாஸ்மாக் பீடிகையின் முன்னால்
கவலை முகம்......
கைகளை உயர்த்தி காவல் நிலையம்
முன்னால் ஆங்கிலத்தில் அறைகூவலும்
கண்டனமுமாய் ஒரு ஒற்றைப்போராட்டம் – யாரும்
பொருட்படுத்தவில்லை படித்துப்படித்து
பைத்தியமான பாவம் இழைஞனை...
அண்ணா சிலையின்
தலையை கொத்தித்தீர்த்தது ஒரு
அண்டங்காக்கை – சோற்றுப்
பருக்கைகளோ எச்சங்களோ காணாத
கோபத்தின் உச்சம்.....
பழைய துணிகளை கிழித்து
பந்து தைத்து விளையாடும்
இழைஞன் அறியவில்லையோ
தன் முன்னால் உடுத்தாமல்
நடக்கும் ஏழை சிறுவனை...
பேருந்து நிறுத்த நிழற்குடைகள்
சலவைக்கற்கள் பதியப்பட்டிருந்தது
நவீன மயமாக்கலாம் – புயல் மழை என
கூரையின்றி வெறுமையில்
சலவைத்தொழிலாளி.....
கையில் பொட்டலங்களோடு
கதர் சட்டைகள் – போராட்ட
வெற்றியை கொண்டாட நேற்றே
வாங்கி வைத்த சரக்குகளோடு
காந்தீயவாதிகள்.....
எனக்கு மட்டும் வெறுமை
தோன்றுமா என்ன..? – சில
வெறுப்பான காட்சிகளை
பொறுப்பின்றி காண்கையில்...
அறிந்தும் அறியாமலுமாய்
சில பொறுப்புகளை தேடி.......
அன்புடன்
அபூ ஃபஹத்
Feb 28, 2012
வெறுமை......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...