அம்மா
****************
வலதும் இடதுமாய்
பத்துப்பாத்திரங்கள் - மூக்கு
உறிந்து உறிந்து ஈரப்பட்டுப்போய்
தொங்கும் முந்தானை....
நெற்றி வியற்கும் கூடவே
தலை முடி கலையும் - எனினும்
தொடர்ந்துகொண்டிருக்கும்
வேலையில் தொய்விருப்பதில்லை....
ஊதிப்பெருக்கிய கனல்களினூடே
பயணிக்கிறது அவள் உயிர் மூச்சு - சாம்பலால்
அடைபட்டுப்போன
நாசித்துவாரத்திலிருந்து பயணிக்கிறது
வேஷமற்ற அன்பின் சுவாசம்.....
அவளின் சிவந்த முகத்திலும் கைகளிலும்
ஆங்காங்கே கரும்புள்ளிகள் - அன்பு மறவாமல்
முத்தமிட்டவையோ அடுப்படியின்
கரி படிந்த பாத்திரங்கள்....
கைகளில் சின்னச்சின்னதாய்
தீக்கொப்பிளங்கள் - நேற்று எப்போதோ
ஆசை மகனுக்காய் சமைத்தபோது
தெறித்து வீழ்ந்த எண்ணைத்துளிகளின்
விழுப்புண்கள்.....
ஏதோ சில மணிகள் மட்டும்
ஓய்வெடுத்துக்கொள்வாளாம் - என்
அடுப்படி சொன்னது அப்போதும்
அடிக்கடி எதற்காகவோ வந்துபோவாள்...
மலர் மொட்டுக்களைப்போல்
தினம் தினம் பிறப்பாள் - சில
புதுக்கவிதைகள் போல் புதிது புதிதாய்
ஏதோ செய்து எல்லோருக்கும்
விளம்புவாள் வெறும் புன்னைகையை
மட்டுமே எதிர்நோக்கி.....
கழிந்த பெருநாளின் தினத்தில்
மகள் கொடுத்ததாம் - அடிக்கடி
ஒரே சேலையை மட்டுமே கட்டி
எல்லோரும் கேட்கும்படியாய் இருப்பாள்....
என் வாசல் மிதியாதே என
வீசி எறிவான் மகன் - சுட்டெரிக்கும்
அந்த வாசகங்களை மறந்து
சில்லரைகளாய் சேர்த்துவைத்ததை
தன் மகன் வயிற்றுப்பேரனுக்கே தருவாள்....
தனக்கென எதற்கும் ஆசைப்படுவதே
இல்லை தன் ஆயுள் அடங்கும்வரை - சுற்றி இருக்கும்
எதனையும் யாருக்கும் தர மறுப்பதுமில்லை
யாரையும் எதிர்பாராமல் பூக்கும்
மொட்டுக்களைப்போல.....
இப்படி அடுப்படிகளில் அடங்கிப்போகிறது
அம்மாவின் நாட்களும் நாளிகைகளும் - சிலபல
மாற்றங்களை எதிர்நோக்கும் நம்மிலிருந்து
மாறுடும் வாழ்க்கையோ எனத்தோன்றும்
ஏகாந்தமோ அவள்....
சேற்றுப்படுகைகளில் நனைந்த
கால்களைப்போல் எழிதில்
கழுவித்துடைத்திடவா முடியும்
அவள் துயரங்களை - ஓரத்தில் வைக்காமல்
அவளை உயரத்தில் வைத்துப்பார்
உயிர் கொடுத்தவள் உனை
மீண்டும் இதயத்தில் சுமப்பாள்.....
அன்புடன்
---அபூ ஃபஹத்____
****************
வலதும் இடதுமாய்
பத்துப்பாத்திரங்கள் - மூக்கு
உறிந்து உறிந்து ஈரப்பட்டுப்போய்
தொங்கும் முந்தானை....
நெற்றி வியற்கும் கூடவே
தலை முடி கலையும் - எனினும்
தொடர்ந்துகொண்டிருக்கும்
வேலையில் தொய்விருப்பதில்லை....
ஊதிப்பெருக்கிய கனல்களினூடே
பயணிக்கிறது அவள் உயிர் மூச்சு - சாம்பலால்
அடைபட்டுப்போன
நாசித்துவாரத்திலிருந்து பயணிக்கிறது
வேஷமற்ற அன்பின் சுவாசம்.....
அவளின் சிவந்த முகத்திலும் கைகளிலும்
ஆங்காங்கே கரும்புள்ளிகள் - அன்பு மறவாமல்
முத்தமிட்டவையோ அடுப்படியின்
கரி படிந்த பாத்திரங்கள்....
கைகளில் சின்னச்சின்னதாய்
தீக்கொப்பிளங்கள் - நேற்று எப்போதோ
ஆசை மகனுக்காய் சமைத்தபோது
தெறித்து வீழ்ந்த எண்ணைத்துளிகளின்
விழுப்புண்கள்.....
ஏதோ சில மணிகள் மட்டும்
ஓய்வெடுத்துக்கொள்வாளாம் - என்
அடுப்படி சொன்னது அப்போதும்
அடிக்கடி எதற்காகவோ வந்துபோவாள்...
மலர் மொட்டுக்களைப்போல்
தினம் தினம் பிறப்பாள் - சில
புதுக்கவிதைகள் போல் புதிது புதிதாய்
ஏதோ செய்து எல்லோருக்கும்
விளம்புவாள் வெறும் புன்னைகையை
மட்டுமே எதிர்நோக்கி.....
கழிந்த பெருநாளின் தினத்தில்
மகள் கொடுத்ததாம் - அடிக்கடி
ஒரே சேலையை மட்டுமே கட்டி
எல்லோரும் கேட்கும்படியாய் இருப்பாள்....
என் வாசல் மிதியாதே என
வீசி எறிவான் மகன் - சுட்டெரிக்கும்
அந்த வாசகங்களை மறந்து
சில்லரைகளாய் சேர்த்துவைத்ததை
தன் மகன் வயிற்றுப்பேரனுக்கே தருவாள்....
தனக்கென எதற்கும் ஆசைப்படுவதே
இல்லை தன் ஆயுள் அடங்கும்வரை - சுற்றி இருக்கும்
எதனையும் யாருக்கும் தர மறுப்பதுமில்லை
யாரையும் எதிர்பாராமல் பூக்கும்
மொட்டுக்களைப்போல.....
இப்படி அடுப்படிகளில் அடங்கிப்போகிறது
அம்மாவின் நாட்களும் நாளிகைகளும் - சிலபல
மாற்றங்களை எதிர்நோக்கும் நம்மிலிருந்து
மாறுடும் வாழ்க்கையோ எனத்தோன்றும்
ஏகாந்தமோ அவள்....
சேற்றுப்படுகைகளில் நனைந்த
கால்களைப்போல் எழிதில்
கழுவித்துடைத்திடவா முடியும்
அவள் துயரங்களை - ஓரத்தில் வைக்காமல்
அவளை உயரத்தில் வைத்துப்பார்
உயிர் கொடுத்தவள் உனை
மீண்டும் இதயத்தில் சுமப்பாள்.....
அன்புடன்
---அபூ ஃபஹத்____
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...