Jun 10, 2011


கருவின் குற்றம்....

"என் உயிரினும் மேலான"
எனும் போதெல்லாம் உனக்காய்
உடன் பிறப்புக்கள் தனது
உயிரையே கொடுத்தார்கள்...

முரண்பாடுகள் முளைக்காமல்
உடன்பிறப்பின் முகங்களை
முரசொலியின் முந்தானையால்
மூடிமறைத்தாய்..

வலத்தொன்றும் இடத்தொன்றுமாய்
கவிக்கோக்களும் கவியரசுகளும்
நின் புகழ் பாட
மானும் மயில்களும்
நின் முன் ஆட திரைத்துறையாய்
மாறிப்போனது உன் வாழ்க்கை...

எமக்குத்தெரியும் இப்போதெல்லாம்
நின் புகழ் பாடாத எந்த வரிகளும்
கவிதையாவதில்லையென்று-
வரிகளோ வார்த்தைகளோ
விஷம் கலக்காமல் விஷயம்
அறியத்தருவதே எமது லட்சியம்

சுயநலத்தின் சுய ரூபம்
அரசு ஊளியன் – நின் கைகள்
அவனுக்காக மட்டும் சூரியக்கதிராய்
சுழன்று வெளிச்சம் பரப்பும்,
நீயும் அப்படித்தானே
பாட்டாளியை ஏமாற்றினாலும்
படிப்பாளியை ஏமாற்றமாட்டாய்...

பாழ்பட்ட பாட்டாளிக்கு ஒரு ரூபாய்க்கு
அரிசி கொடுப்பாய் - நின்
வீட்டில் மட்டும் பட்டை தீட்டிய
பசுமதி அரிசியல்லவா

உனது விழுதுகள்
நிமிர்ந்தால் பாரீசில் மதிய உணவு
உட்கார நேர்ந்தால் ஹாங்காங்கில்
தேநீர் விருந்து.....

எமது குழந்தைகள் இன்றும்
கையால்தான் உண்கிறது
பசுமதி ஆனாலும் பழைய சோறானாலும்
ஏனெனில் கரண்டிக்கு ஆசைப்பட
அவர்களுக்கு காரணங்கள் இல்லாததால்....

எம்மீது உனக்கு சிரத்தை போனது
உமது குடும்பம் சிறைக்கு போகிறது
உனக்கென்ன கவலை
வீரத்தம்பிகளாய் நின்
முன்னால் அஞ்சா நெஞ்சர்கள்
நின் பின்னால் தழபதிகள் – தங்கை
என்ன தரணியையே மீட்பார்கள்...


வழி பிழைத்ததோ உனக்கு..?
பெரியார் தெரியாதானாய்,
அண்ணாவின் அறிவிழந்தாய் - உன்
உதிரத்தில் முழைத்த
விருட்சங்களுக்கு மட்டும் கிளை
பரப்பினாய் அதற்காய் எம் செந்நீரை
பிழிந்தெடுத்தாய்......


முதல் முதலாய் நின்
இமை தாண்ட துடிக்கிறதோ
குளமாகிப்பான விழி நீர் – வேண்டாம்
உம் கண்ணீர் பட்டு இம்மண் நச்சுறவேண்டாம்....


ஊழல் எனும் முதல் விதையை
குளோனிங் செய்து
எமக்கறிவித்தவன் நீ – இதோ
கணம் நோக்கி நின் கால்களையே கொய்யப்போகிறது...


யாருமின்றி அன்னமுண்டு,
அன்னமின்றி யாருமில்லை
இவ்வுலகில் - அன்றே கொல்லும்
அரசனுக்கு பிழைக்கும்,
நின்று கொல்லும் இறைவனுக்கு பிழையேது....

உன் வழி பிழைத்தது யார் குற்றம்...???
வாழ்விழந்து போன எமது குற்றமா....???
ஊழல் கிளை பரப்பி நிற்கும் நி்ன்
குற்றமா..???

விழி பிதுங்கி நிற்கும்
உடன் பிறப்பிற்கோர் வழி சொல்,
இல்லையேல் வழக்கம்போல்
அவன் மீதே பழி சொல்....
அவனறியான் ஒருபோதும்
இது கருவின் குற்றமென்று......



அன்புடன்

குளச்சல் அபூ ஃபஹத்

1 comment:

  1. hav read all d posts bhai.. gud work .. with ur permission may i share dis in facebook wid ur blog address....

    ReplyDelete

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...