ஆங்கோர் ஏழைக்கு
எழுத்தறிவிக்க அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
நேற்றைய கல்விச்சாலைகள்...
மண் தரையில் அகரம்
என் தமிழ் தாயின் முதல் வரம்
புல் தரையில் ஆகாரம்
பெற்ற தாயின் ஆனந்தம்...
காற்றுவெளிகளில் கலந்துபோன
ஆத்திச்சூடிகள் - கரும்பலகையில்
எழுதி முடிக்கப்பட்ட எண் கணக்குகள்..
வான் முட்டும் சத்தத்தில்
வாய்ப்பாட்டு ராகங்கள் -
மூலைகளில் சில
அடைத்து கண்ணாமூச்சிகள்
எங்கோ என ஏழைகள்
ஏங்கிப்போகும் உயரத்தில்
கல்வியும் கல்விச்சாவடிகளும் இன்று....
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்காண்போம்
என அன்று - ஏழை கண்டு
இன் சிரித்திகழ்ந்து இறைவனை
மறந்திடும் இன்னாதார் இன்று...
தீ மிதித்து மண்சோறு தின்று
தன் மகனை பயிலவைத்து
சான்றோன் என கேட்ட தாய் அன்று...
தன் மகனுக்கு இதுதான்
தாய் என்று சான்று சொல்ல
சில பல தாய்களுடன் அனாதையாய்
விடுதிகளில் இன்று....
ஒருவன் ஆய்ந்தறிந்தான்
மற்றொருவனை ஆய்ந்தறியவைத்தாள்
இன்னுமொருவனை
சொல்லித்தெரியவைத்தாள்
எனினும் இன்றிவர் யாரும்
தெரியாதவளாய் தாய்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...