May 26, 2012

வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....


வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....
------------------------------​--------

வெறுமனே நான்
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்
விடுங்கள் என்னை – யாரும்
கேட்பாரற்ற என் கோட்பாடுகளில்
குறை காணவில்லை நான்.......

கல்லுக்குள் ஈரம் என்பீர்
உங்கள் நெஞ்சுக்குள்
ஈரமில்லாமல் – விடுங்கள்
என்னை வெறுமனே
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....

என் அறுந்த கைக்கு
உப்புமில்லை - உங்களில்
எனக்காய் ஒரு ஆறுதல்
வார்த்தையுமில்லை
விடுங்கள் நான் வெறுமனே
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்.....

மேடை முழங்க வீராவேசம்
பிறகு மேடை இறங்கினால்
எமை மூடர்களாக்கும்
வெறும் வேஷம் - கொஞ்சம்
விடுங்கள் என்னை நான்
வெறுமனே வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....

ஒற்றுமை வேண்டுமென்பர்
தினம் ஓராயிரம் அணிகளாய்
வேற்றுமையும் காண்பர் – வேண்டாம்
எனக்கிவர்கள் ஆயினும் இவர்கள்
கண்கள் படாமல் வெறுமனே
கொஞ்சம் வாழ்ந்துவிட்டுப்போகிறேன்......

விலைபேசப்படுகிறது ஏழையின்
கல்வியும் கருவறையும் - சிறிதும்
உணற்சிகளற்றுப்போயிருக்கிறது
மானிட சமூகம் இதில்
மானம் இழப்பதைவிட கொஞ்சம்
தூரமாய் வெறுமனே நான்
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்...

மலர்களாய் பெய்திறங்கும்
சாரலுண்டு என்னோடு – சில்லென
புற்களை பொதிந்து நிற்கும்
பனித்துளிகளும் என்னோடு...

வேகமாய் விண் தொடும்
மேகமாய் நான் கொஞ்சம்
நிம்மதியாய் வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....

அன்புடன்

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...