நிறங்கள்
******************
கண்ணீருக்கு நிறங்களில்லை
தண்ணீரைப்போலவே – சில பல
உணர்வுகளை பிரதிபலிக்க
நிறங்கள் தேவையில்லை போலும்....
ஊசலாடும் உயிரின்
கடைசி நிமிடங்களில்கூட
யாரும் அறிந்து கொண்டதாய்
தெரியவிக்கவில்லை மூச்சுக்காற்றின்
நிறம் என்னவென்று... நிறமிகள் இல்லாத படைப்புகளாய்
பல மிருகக்கண்கள் – கண நேரத்தில்
குணம் மாறும் சில மனித
மிருகங்களைப்போல் அவைகள்
காரணமின்றி நிறம் மாறுவதில்லை....
நேற்று சொன்னதையல்ல நான்
இன்று சொல்வது – இன்று
சொல்வதல்ல நாளையது
ஈனம் கெட்ட என் பேச்சில்தான்
நிறங்களற்ற எத்தனை குணங்கள்......
நீதி சொல்லும் மனிதரிலும்
இருக்கின்றார் நேர்மையின்றி – நிறங்கள்
இல்லையெனினும் காத தூரத்தில்
காணும் கானல் நீர் கண்களை
நம்பவைத்து கடைசியில்
காணாமல் போவதுபோல்....
சிவப்பு ஆபத்தென்றால் பச்சை
காப்பாற்றுமாம் – மஞ்சளின்
எச்சரிக்கையை மறந்துபோனதால்
நீலமாகிப்போனது என் தனி நிறம்.....
சில நிறங்களை தெரிந்துகொள்ள
சில குணங்களை தெரியவேண்டுமாம் - நான்
தேடிப்பாற்கிறேன் பல காலங்களாய்
மனிதரில் மின்னலாய் மாறுபடும்
சொன்னால் புரியாத குணங்களை......
காலத்தின் கைகளில்
எழுதப்பட்டதாய் தெரியும்
வாழ்கையின் நிறங்கள் நம்
கண்களை மறைத்து நிற்கிறது
நிறங்களற்ற ஓவியங்களாய்.....
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...