Dec 25, 2013


முன்னால் இல்லையென்று

 தலையசைத்துவிட்டு
பின் திரும்பி பாற்காமல் 
ஆம் என்று இரகசியமாய்
சிமிட்டும் பிடரிக்கண்கள்
உறுத்தாமல் படுத்துகிறது....


சாத்தியமில்லாத ஒன்றில்

சாத்தியங்களை தேடும்
சகட்டுத்தனம் முன்கூட்டியே 
தீர்மானித்து தவறிழைத்து
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும்
முகங்களின் அநீதம்....

காதறுந்த துலாசில்

எடைக்கான கற்கள்
காலூன்றி நிற்பதில்லை
அநீதமும் அப்படித்தான்

நீதத்தை கொன்று சேர்த்த

சிரிப்பில் புன்னகையின்
வெளிப்பாடிருப்பதில்லை
அழிவின் எக்காளம் 
அறை முழுக்க எதிரொலிக்கும்...

சுருட்டிய உன் பாய்களில்

சோதனைகள் தொடர்கிறது - நீ
எல்லா பகல்களிலும் பாயை
மறந்துபோவதுபோல் 
பாவத்தையும் மறந்துபோகிறாய்
இரவுகளில் படுக்கை விரிப்பதுபோல்
மீண்டும் பாவமோட்சம் தேடுகிறாய்...

கண் திறந்து பார்

உன் கண்ணெதிரே 
கண்களே தெரியும் - நீ
கண்ணாடியில் பார்த்தால்
உன் முகம் பார்த்து
முகம்சுழிக்கவே இயலும்...

வெளிச்சத்தில்

முகங்களை மூடாதீர்கள்
இருண்ட அகங்களை
அது வெளிப்படுத்தும்.....