Dec 30, 2012

முகாரி பாடும் முகவரிகள்......



முகாரி பாடும் முகவரிகள்
******************************

பழைய வீட்டு காதர் குஞ்ஞியின்
மகன் அசங்கண்ணு
காலேஜ்ல படிச்சவன்- பேரு
படிப்புக்கேத்தமாதிரி இல்லைண்ணு
மாத்தியிருக்கானாம் ஹாசன். கே !!.....

சாப்புக்கடை மோலாளி
மைதீங்கண்ணு  புள்ளைக்கு
வாப்பாவின் பெயரை  வச்சாராம் -மம்மாலி
மம்மாலிண்ணு எல்லாரும் கூப்பிடும்போ
கேவலமா இருக்கும்மா.....


தாத்தா பேரு பேரனுக்கு
கொத்தனார் வெள்ளையன் பெத்த
புள்ளைக்கு கிருட்டினண்ணு
வாய் நெறய கூப்பிட்டாரு - கழிஞ்ச வருஷம்
டாட்டாவுல வேலைண்ணு போனான்
""கிருஷ்"" மட்டும்தான் இப்போ இருக்கு.....

தோப்புக்கடை அடிமைக்கண்ணு மகன்
சேமக்கண்ணுக்கு ரெண்டு பயலுவோ - பேரு வக்க
மறந்திட்டானோ என்னமோ
வாயில நுழையாத தஸ்ஸு
புஸ்ஸுண்ணு கூப்பிடுறான்
வெளிநாட்டில பொறந்ததாதம்.....


தவமிருந்து பெத்த புள்ளையாம்
சேசடிமைண்ணு பேரு வச்சார்
தாத்தா குருசு மிக்கேல் - செத்து
பத்து வருஷமாச்சிண்ணாலும் திட்டுறத
நிறுத்தவே இல்லை
பேர மாத்தின பேரப்புள்ள ஜேக்.....

சிவப்பு நிறமும் நல்ல ஒசரமும்
அவங்க மாமா மாதிரி வரணும்- வீரத்துக்கு
பேரு போன குடும்பமில்ல
மீராசாண்ணு அவரு
பேரு வய்யி புள்ளக்கி.....

ஊரும் பேரும் கூடி
குடும்பம் ஒண்ணா சேந்து
பாத்து பாத்து வச்சபேரு - ஒத்தை
நேர் காணலில் வீசப்படுகிறது
பட்டணத்து ஒடைகளில்....

காலம் கணக்கு சொல்கிறது
காணாமல் போன
நேற்றைய முகவரிகள் பற்றி - தினம்
தினம் மாற்றப்படுவது
வெறும் பெயர்கள் மட்டுமல்ல
சமூகங்களின் அடையாளங்களும்தான்....

மாற்றப்படும் பெயர்களால்
பெரிதாய் மாற்றங்கள் வந்ததாய்
நான் காணவில்லை - புதிதாய்
நவீனத்தின் வயிற்றில் பிறக்கிறது
மூட நம்பிக்கைகள்....


புதிய தலைமுறைகளை
அழைப்பதற்கு கண்ணுவும் பிள்ளையும்
குஞ்ஞியும் இல்லாமல் போகலாம் - யாரென
அறியத்தருவதற்காய் சாதா
ஒலித்துக்கொண்டே இருக்கும்
தலைமுறைகள் தாண்டி நம் முகவரிகள்.....


அன்புடன்

பீர் முஹம்மது.... (அபூ ஃபஹத்)A







முகாரி பாடும் முகவரிகள்
******************************

பழைய வீட்டு காதர் குஞ்ஞியின்
மகன் அசன் கண்ணு
காலேஜ்ல படிச்சவன்- பேரு
படிப்புக்கேத்தமாதிரி இல்லைண்ணு
மாத்தியிருக்கானாம் ஹாசன். கே !!.....

சாப்புக்கடை மோலாளி
மைதீங்கண்ணு தம் புள்ளைக்கு
வாப்பாவின் பெயரை  வச்சாராம் -மம்மாலி
மம்மாலிண்ணு எல்லாரும் கூப்பிடும்போ
கேவலமா இருக்கும்மா.....


தாத்தா பேரு பேரனுக்கு
கொத்தனார் வெள்ளையன் பெத்த
புள்ளைக்கு கிருட்டினண்ணு
வாய் நெறய கூப்பிட்டாரு - கழிஞ்ச வருஷம்
டாட்டாவுல வேலைண்ணு போனான்
கிருஷ் மட்டும்தான் இப்போ இருக்கு.....

தோப்புக்கடை அடிமைக்கண்ணு மகன்
சேமக்கண்ணுக்கு ரெண்டு பயலுவோ - பேரு வக்க
மறந்திட்டானோ என்னமோ
வாயில நுழையாத தஸ்ஸு
புஸ்ஸுண்ணு கூப்பிடுறான்
வெளிநாட்டில பொறந்ததாதம்.....


தவமிருந்து பெத்த புள்ளைண்ணு
சேசடிமைண்ணு பேரு வச்சார்
தாத்தா குருசு மிக்கேல் - செத்து
பத்து வருஷமாச்சிண்ணாலும்
திட்டுறத நிறுத்தவே இல்லை


Dec 29, 2012

உப்பா.....!!


ஒரு மின்னலப்போல
வந்து போவுது கண்ணுல - அந்த
தலைப்பாயும் மடிச்சிகெட்டும்
 கோவத்துல பாக்கறபார்வையும்.....

காலைல காப்பிக்கு
முன்னால சொம்புல
பழங்கஞ்சி வெள்ளம் வேணும் - கூடவே
மரிச்சினி கெளங்கிருந்தா
பச்சமொளவும் வேணும்....

விடிகாலையில தலையில
சுத்துற தலைப்பா - மத்தியானம்
பசியாறி முடிஞ்சவுடனே
கொஞ்சம் சாஞ்சி படுக்கும்போதுதான்
களட்டி தலைக்கு வைக்கும்....

பாக்கு வெட்டுறதுக்குணே
மடியில வச்சிருக்கும் ஒரு
மடக்கு பேனா கத்தி - வீட்டுல
குழந்தையோ அழுவணி கண்டா
பேனா கத்தியால பேடி காட்டும்....

 நைஸான கை பனியன் 
 போட்டாத்தான் அழகு - வேட்டி 
எப்பவும் வெள்ளையாத்தான்
புடிக்குமுண்ணாலும் அடிக்கடி
சிங்கப்பூர் பாலிஸ்டர்
சாரமும் உடுக்கிறதுதான்....

அடி மடி எப்பவும்
கனமாத்தான் இருக்கும் - வாழை
தடையில பொதிஞ்ச போயிலயும்
சின்ன வெத்திலை பொதியும்
ஒரு சுண்ணாம்பு டப்பாவும்....

தட போயிலக்காக ஒரு
பர்லாங்கு தூரம்
வேணும்ணாலும் போவாரு - ஆனாலும்
யாப்பாண போயிலைய தொடமாட்டாரு....

மடிச்சிகெட்டுற பயலுவளை புடிக்காது
மரியாதை இல்லாதவனுவோ - ஆனா இவரு
மடிச்சி கெட்டுனா மரியாதயோட
பாக்கணும் ஊரெல்லாம்...

கடப்புறத்துல போய்
மணிக்கணக்கா இருப்பாரு - அரை
மணிக்கூறு வீட்டுல அடங்கி
இருக்கமாட்டாரு....

ஆசாரியோ கொத்தனாரோ
டெய்லரோ பெய்ன்டரோ நம்பிக்கை
சுத்தமா கொறவுதான் - ஆயிரம் தடவை
அளந்து அளந்து அதட்டுவாரு....

இண்ணக்கி வரை யாரும்
சொல்லாதுங்கோ வேற
ஒரு பெண்ணை
நிமிந்து பாத்தாருண்ணு - வெக்கம்
ஒண்ணுமில்லை ஆனாலும்
அப்படி ஒரு நல்ல மனுஷன்.....

சொம்புல தண்ணி எடுத்து
அண்ணாந்து வாய்
கொப்பளிப்பாரு - ஆயிரம்
கண்ணுவேணும் அழகை பாக்கறதுக்கு
செவப்பு நாக்கும் வெத்திலை
கறை படிஞ்ச பல்லும்....

ஒண்ணா வாழ்ந்து முடிச்சது
நாப்பத்தஞ்சி வருஷம் - மரிச்சி
பந்திரண்டு வருஷமாச்சி...

இப்பவும்
ஒரு மின்னலப்போல
வந்து போவுது கண்ணுல - அந்த
தலைப்பாயும் மடிச்சிகெட்டும்
கோவத்துல பாக்கறதும்.....


____

அன்புடன்
வாப்பும்மாவின் அழகு நினைவுகளாய்

பேரன்....

 அபூ ஃபஹத்

Dec 28, 2012

மின்னஞ்சல்......


அன்பின் மனைவிக்கு,
ஆசை மகளுக்கு,
என் உயிர் அம்மாவுக்கு என
உருகிய வரிகளோடு துவங்கும்
நேற்றைய தபால்கள்.....

ஹாய், டியர், மிஸ்டர்
என உறவுகளையும் உணர்வுகளையும்
உருமாற்றிய இன்றைய
மின்னஞ்சல்கள்.....

வார்த்தைகளால் வாய்மொழிய
இயலாத வாழ்க்கையின்
வலிகளை வரிகளில் விவரிக்கும்
முந்தைய தபால்கள் அஞ்சல்...

இதயங்களினின்றும் பிறக்காத
விரல் நுனிகள் வெளிப்படுத்தும்
துரித வார்த்தைகளில்
குறுகிப்போயிருக்கிறது மின்னஞ்சல்கள்...

தபால்களின் நீண்ட
எதிர்பார்ப்புகள் தந்தவை
காத்திருப்பின் சுகமும்
கனவுகளின் தாகமும்....

விரல் சொடுக்கும் நேரத்தில்
சென்று திரும்பும் மின்னஞ்சல்களில்
ஈரமிருப்பதில்லை - வேகத்தில்
வரும் வரிகளில் வெறுக்கும்படியான
அவஸ்த்தைகள் மட்டுமே அதிகமாய்...

கடல்களும் கண்டங்களும்
தாண்டி வரும் தபால்களில்
தான் சார்ந்த பொய்கள் அதிகமாய்
விளம்புவதில்லை யாரும் - கடிதங்களை
எதிர்பார்த்திருக்கும் இதயங்கள்
வலிக்கும்படியாய்....

தினம் தினம் முகம் பார்க்கும்
கண்ணாடியில் நின்று
நான் அவனில்லை என தன்னையே
ஏமாற்றும் பொய்களைச்சுமந்து
வருகின்றன மின்னஞ்சல்கள்.....

ஒவ்வொரு முறை வரும்
கடிதங்களும் பலமுறை
படிக்கப்படுகின்றன - அவைகளில்
பாசங்களோ கோபங்களோ இருப்பினும்.....

இப்போதெல்லாம் திறந்த
வேகத்திலேயே மூடப்படுகின்றன
மடிக்கணணிகள் - சில
எதிர்பார்ப்புகளற்ற மின்னஞ்சல்களால்
வெறுப்புகள் வெளிப்படாமலுமில்லை.....

கால ஓட்டத்தில் மனிதம் மறந்துபோனது
தபால்காரனை மட்டுமல்ல - சில பல
வலிகளையும் இதயம்
வெளிப்படுத்தும்போது ஆறுதலாய்
வந்து நிற்கும் தபால்களையும்தான்.....


அன்புடன்

அபூ ஃபஹத்

Dec 18, 2012

வழைகுடாவில் மழை....



நேற்றும் வானம்
இருண்டே இருந்தது – கடல்
அலைகளில் புதிதாய் வேகம் எதுவும்
இருக்கவில்லை முன்பு போலவே
அமைதியாய் இருந்தது...

கூண்டுகள் இல்லாத வளைகுடா
புறாக்கள் தங்குவதற்கென புதிதாய்
இடம் தேடவில்லை -யாரும்
கண்டு கொள்ளவில்லை என
வருத்தங்களும் அவைகளில் தெரியவில்லை......

கார் மேகங்களின் கரைகளில்
சில வெள்ளி மின்னல்கள் - கண்களை
காவு வாங்குமோ என
பயந்து போன மின்னல் மனிதர்கள்....

ஒவியர்களை வியக்கவைத்தன
நீலக்கடலில் வீழ்ந்து நிடந்த
மழை மேகங்கள் – தூரிகைகள்
சமைக்காமலே நொடிப்பொழுதில்
உருமாறின முகிலோவியங்கள்.....


வெள்ளிக்கிண்ணங்களில் விழுந்து
தெறிக்கும் முத்துக்களைப்போல்
சில்லென ஒலியுடன் சாலைகளில்
விழுந்து காணாமல் போயின மழைத்துளிகள்...

ஆளரவமின்றி வெறிச்சோடிப்போன
நகரத்தின் சாலையோரங்கள் – மணித்துளியாய்
விழுந்த மழைத்துளிகளை ஈவிரக்கமின்றி
மிதித்துச்சென்றன வாகனங்கள்....

ஏதோ சில உயரங்களில்
என் வீட்டு ஜன்னல்கள் – என்
கை தாண்டி விழுந்த ஒற்றை
மழைத்துளியை யாரோ கைநீட்டி
தாங்கினர் கீழ் வீட்டு ஜன்னலில்....

யார் முகத்திலும் அழுகையோ
வருத்தங்களோ தெரியவில்லை
மழைநீரைத்தவிர – யார் காதுகளிலும்
கைபேசிகள் இல்லாதாலோ என்னவோ
காரணம் புரியவில்லை....

பனித்துளிகளைப்போல் இறகுகளின்
நுனிகளில் தொங்கின மழைத்துளிகள் - புற்கள்
இல்லாததால் புறாக்கள் சுமந்தன பொன் துளிகளை....

கம்பளிக்குள் முகம் புதைத்து
கனவுகளை சூடேற்றிக்கொண்டே
இருக்கிறேன் நாளைய
பனி படர்ந்த விடியலைத்தேடி.....

அன்புடன்

அபூ ஃபஹத்

Dec 10, 2012

கடமை.....



கடமை.....!!!
**********

""டேய்....டேய்...எப்பவே எழுப்புறேன்...எழுந்திருடா...டேய்...பீர்,"".. முஜீப் உருட்டி எழுப்பினான்...

கம்பளிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த தனது காலை உள்ளே இழுத்தவாறு

""ம்ம்...சரி, இப்போ எழும்பறேண்டா....சே...என்னடா...இப்பவே...கொஞ்சம் வெயிட் பண்ணு இப்பே எழுந்திருவேன்..."

மீண்டும் சுக தூக்கத்தில் பீர் முஹம்மது.."


டேய் நீயாவது எழும்புடா...டீ போட்டு வச்சிருக்கேன்...சாதனம் எதுவும் இல்லை, நெஸ்டோ வரைக்கும் போணும்...எனக்கு டிரைவிங் தெரிஞ்சா அல்ளாண உங்களை எழுப்பவே மாட்டேண்டா...முஜீப் அடுத்த பெட்டில் படுத்திருந்த மஹபூபை அழைத்தான்..." வேலைக்கு ஆகாது...

டேய் அரை மணிநேரத்தில எழும்பலைண்ணா தண்ணியை தலைவழியா ஊத்தீருவேன்.."" - முஜீப்.

அல்ளோ இவன் தொல்லை தாங்க முடியலைடா..இப்பதாண்டா தூங்கினேன்...அதுக்குள்ளே ஏண்டா உயிரை எடு்க்கறே..

மஹபூப் உளறித்தள்ளிவிட்டு கைகளை கால்களுக்கிடையில் சொருகி மீண்டும் தூங்கலானான்..

சரி ஓ.கே..நான் போறேன்.. கோல்டு ஸ்டோர்ல போய் எதாவது கெடக்கிறத வாங்கி வக்கீட்டு வாறேன்...""

எதுவுமறியாமல் தூங்கிக்கொண்டிருந்தனர், பீர், காதர், மஹபூப், ஷமி மற்றும் நாசர்..

முஜீப் நடையை கட்டினான்.. முக்கா மணிக்கூரில் கை நிறைய பொருட்களுடன் வந்து கதவை திறக்க முடியாமல் பெல் கூட அடிக்க முடியாமல் திணறினான். ஒரு கையில் முழுவதும் பிளாஸ்டிக் கீஸ், மறு கையில் ஒரு டிறே முட்டை... கீழே வைக்க கூட முடியவில்லை...


ஒரு வழியாக எதிர் ஃபிளாட்டில் வசிக்கும் சலாம்கா முஜீபின் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்து கொடுத்துவிட்டு முஜீபிடம் கோபத்தில் ஏதோ சொல்லிச்சென்றார்...

கள்ள சூவருகளு நன்னாவில்ல இவரொன்னும் முஜீபே...இ்வம்மாரு நன்னாவில்லா... நினக்கு வட்டா..ராத்ரி முழுவன் வண்டிக்கதகளும் சீட்டும் களிச்சிட்டு ராவில சுப்ஹ் பாங்கு விளிக்கும்போ ஒரு ஒறக்கு... இதிநொக்கே நீயாணு காரணம் முஜீபே...என்று மலப்புறம் மலையாளத்தில் திட்டித்தீர்த்தார் சலாம்கா...

கதவை திறந்து பார்த்த முஜீப் அதிர்ந்துபோனான்...

"" டேய் என்னடா பன்னாடைகளா இதுவரை எழும்பலியா...என்ன எளவும் செய்யுங்கோ..நான் குளிக்கப்போறேன் ""

எதையும் காதில் எடுத்துக்கொள்வதாக இல்லை தூங்கும் நால்வரும்...

குளித்து முடித்து உடை அணிந்து டேய் நேரம் ஆச்சு வாங்கடா...வந்தா கெடக்கும்....இல்லைண்ணா பழைய கதைதான்..நான் போறேன் என்று சொல்லி முஜீப் றூமை விட்டு வெளியேறினான்..""

கொஞ்ச நேரம் போயிருக்கும் திடீரென மஹபூப் எழும்பினான்.. அல்லாஹ் நிறைய நேரம் ஆயிட்டே...சே..பாத்றூமுக்கு ஓடினான்...

5 நிமிடத்தில் குளி்த்து உடை மாற்றி எதையோ கையில் எடுத்துக்கொண்டு ஓட தயாராகும்போது பீர் எழும்பினான்...டேய் முஜீப் ஏண்டா என்னைய எழுப்பைல....?? நீ ஒரு மை.... போடா என்று சொன்னவாறே் பக்கத்தில் படுத்திருந்த காதரையும், ஷமீமையும் ஓங்கி ஒவ்வொரு அறை விட்டதில் பதறி எழும்பி என்னல..தூங்க உடமாட்டியாண்ணு கேட்டுக்கொண்டே பக்கத்தில் இருந்த 1100 நோக்கயா போணை எடுத்து மணியை பாத்துவிட்டு...படச்சோனே...அந்த றாஸ்கல் எங்கடா அன்சாரை...எழுப்பாமலே போய்ட்டான்...""


மஹபூப் குறுக்கிட்டான், டேய் சும்மா போ..அவன் காலைலயே எழுப்பினான்...யாரும் எழும்பல...சரி நான் போறேன் வந்து சேருங்க...

பீர் பேசிக்கொண்டிருக்கும்போதே காதர் பாத் றூமுக்கு உள்ளே நைசாக போய்விட்டான்.

ஷமீம் கோபத்தில் பாத்றூம் கதவை தள்ளினான்...டேய் முடியலடா ப்ளீஸ்...""

இப்போ வந்திருவண்டா என்று சொல்லியவாறே எல்லாம் முடித்து குளித்துவிட்டு வெளியே வந்தவுடன் ஷமீம், பின்னர் பீர் என எல்லோரும் றெடியானபோது ஏறத்தாள நேரம் அதிகம் ஆகிவி்ட்டது.

மெதுவாக ஜன்னலை திறந்து பார்த்தான் ஷமீம் சத்தம் குறைந்து வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது...சிக்னல்களில் வாகனங்கள் இல்லை... தம்மாம் மெயின் சிக்னல் ஆட்கள் சில் ஓடிக்கொண்டிருந்தனர்...ஷமீம் படார் என ஜன்னலை அடைத்துவிட்டு ஓடினான்...""



டேய் நேரம் நெறய ஆயிட்டுடா மச்சான்..ஓடுறா இண்ணக்கும் பழைய கதைதான்ணு நெனக்கியேன்...என்று சொல்லி கையில் கிடைத்ததை எடுத்து சுருட்டிக்கொண்டு மூவரும் ஓடினர்...

""என்ன கொடுமைடா இது இவ்வலவு நேரம் ஒரு வண்டி கூட இல்லை..இப்போ பாரு என்ன
போக்கு போறானுவோ""....சிக்னலை முறிச்சி கடந்து ஓடினர்...அல்லாஹ்...கொஞ்சம் ஸ்லோவா போங்கடா களியில்லடா....காதர் இரைத்தான்...

ஒரு வழியாக ஓடிச்சென்றடைந்து பள்ளிக்கு வெளியே வெகு தூரத்தில் இருக்கும் பிஸி மேன் மார்க்கெட்டுக்கு முன்னால் வரிசையாக கை கட்டி நின்றிருந்தவர்களுக்கு பக்கத்தில் முசல்லாவை விரித்து அல்லாஹு அக்பர் என்று கை கட்டினர்"" கை கால் நடுங்க தொழுதனர்...

கிடைத்த ஒரு றக்கஅத்தையும் முடித்த கையோடு நேரத்தில் தொழ முடியாத ஏமாற்றத்தோடு மூவரும் முசல்லாவை மடக்கி கையில் எடுத்துக்கொண்டு முஜீபை நோக்கி நின்றனர்.....

இவன் தொழுதா உடனே வரமாட்டான்...இவன்ட்ட இதுதான் பெரிய பிரச்சினை...எவ்வளவு நேரம்டா இவன் பள்ளியில இருப்பான்....பசிக்கிதுடா..என்று ஷமீம் சொல்ல பீர் முஹம்மது சொன்னான் வாருங்கோ நமக்கு போவோம்..நல்லா பசிக்கிது..முதல்ல நம்ம சாப்பிடுவோம்..அவன் வருவான்...

இனி எல்லாரையும் பாத்து முத்தி மணத்தீட்டு வரும்போ வயிறு கொத்துபா ஓதீரும்..வாங்கடேய்...என அவசர அவசரமாக நடையை கட்டினர்..

மாப்ள காதர்..இண்ணக்கி முஜீப் என்னத்தை வச்சானோ....?? பிரியாணி வச்சிருப்பானோ...??

ஏன் நீ கிச்சன்ல போனால்லா...பாக்கலியா...??

நல்லா மணம் மாப்ள...ஆனால் என்ன இருக்குண்ணு கவனிக்கலை...

எதுவும் வச்சானா இல்லியா....?? பீர்..

அப்டியெல்லாம் செய்யாம இருக்கமாட்டான்.... - காதர்...

ேய் மாப்ள ஒண்ணும் வக்கலைண்ணா சத்தியமா கொண்டே புடுவேன் அவனை... நான் மெனக்கெட்டு ரஸ்தனூறால இருந்து வந்து கடைல ஒண்ணும் சாப்பிட முடியாது.... நாசர் பின்னாலிருந்து குரல் கொடுத்தான்..


அடங்கு மாப்ள...நீ அடங்கு....சாப்பாடுதானே...சவூதி அரேபியால பஞ்சமா...-காதர்


""எதுக்கும் சிறாஜ் காக்கா வரும் அதுவரை நில்லு எல்லாரும் ஒண்ணா போலாம்...""

சரி, இண்ணக்கி சாப்பிட்டதிரிதான்.... அவரு அசர் தொளுது மஃரிபுக்கு வருவாரு அப்போ உச்ச சாப்பாடா...நான் போறேன்..சாவியை இஞ்ச எடு....


சரி வாங்க போவோம்.. என விரைந்தனர் றூமை நோக்கி...""

றூமை நெருங்கும்போதோ மூக்கை துளைத்தது வாசனை...என்ன மாப்பள இது முஜீபை தவிர எவனும் இப்புடி வக்கமாட்டான்..கண்டிப்பா கலக்கீருப்பான்...சாப்பிட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை... ---நாசர்.

பீரு நீ பிளைட்டை கழுவி வச்சிரு நான் போய் ஒரு 7அப் வாங்கீட்டு வந்திர்றேன்..."" - மஹபூப்..

சரி மாப்ள...நீதாண்டா பாசம் உள்ளவன்... --காதர்""

றூமின் கதவை திறக்கும்போது எதிர் வீட்டு வாசலில் சலாம்கா நின்றார்...

எந்தா நல்ல பார்ட்டிகள்..ஏவிடே இருந்நு தொழுது...நான் பேக்கில் நின்நு நோக்கி....நிங்ஙளொக்கே ஒந்நிச்சி இமாமின்றே தொட்டு பின்னில் நின்நது கண்டாயிருந்நு.....எந்தா சுகம் அல்லே மக்களே....

நந்னாயிக்கீடேடா மக்களே...... என்று கிண்டல் பண்ணிவிட்டு ஷெரி ஷெரி..வா.. கழிக்காம்.. நல்ல நெய்சோறு உண்டு..வாடா குறே உண்டு...வாடா மக்களே... என்று வாய் நிறைய கூப்பிட்டார்...

அவர் மீது கோபத்தில் முறைத்துவிட்டு சும்மா ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேண்டாம் நம்மள் இவிடே கழிக்காம் என்று களியிக்காவிளை பாஷையில் ஷமீம் சொல்லிவிட்டு வீட்டில் பிரியாணி இருக்கும் நம்பிக்கையில் கெத்தாக கதவை திறந்து உள்ளே வந்தனர் அனைவரும்....

எல்லோரும் றூமின் உள்ளே போய் இருக்க பீர் முஹம்மது பிளேட்டை கழுவ கிச்சனுக்கு வர லைட்டை போட்டவுடன் அதர்ந்துபோனான்....நேராக றூமில் வந்து,

டேய் இண்ணக்கி ஆப்புதான் மோனே....என்று சொல்ல அங்கே ஏற்கெனவே நியூஸ் பேப்பர் விரித்து ரெடியாக காத்திருந்த காதரை மிதித்துவிட்டு....பீர் சொன்னான்,

கிச்சனை பாத்தியா நீ...பாக்காமலே நல்லா மணக்குது, அவன் மலத்தீட்டான், பயங்கர பிரியாணி..என்னடா இது...அங்க போய் பாரு கிச்சன்ல....

காதர் போய் பாத்துட்டு வந்து, """இல்லடா மாப்ள நல்லா மணத்துதுடா...இன்னா இப்போகூட மணக்குது....."""

கொன்னுருவேன் போயிரு...சலாம்கா நல்லா கூப்பிட்டாரு அவரையும் நக்கல் பண்ணீட்டு வந்துட்டு....டேய்..பசிக்கிடா....---ஷமீம்....


இப்போ என்ன செய்றது வெளியே போவோமா என மஹபூப் கேட்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது...

அஸ்ஸலாமு அலைக்கும்... சிராஜ் காக்கா உள்ளே வந்தது...

வியாழாச்ச ராத்திரி தொடங்கணும், எனத்தடா பேசுதியோ...ஒறங்குறவனையும் ஒறங்க உடாம ஒரே அவுத்து தட்டுயல....இவனுக்கு வாய்ல ஸ்பீக்கர்தான் இருக்கோ என்னவோ...சத்தத்துக்கு ஒரு கணக்கு இல்ல.... நாலு மணி வரை நல்லா கும்மாளம் போட்டுட்டு சுப்ஹ் வாங்கு இடும்போ சத்தம் கேட்டுது, நான் பாத்துட்டுதான் கெடந்தேன்...

நான் பாத்றூம் போவும்போ எல்லாரும் பேசீட்டு இருந்தத...வெலியே வந்து பாக்குறேன்....எனக்கு பாத் றூம் லைட்டையும் சேத்து அணைச்சிட்டு வந்து கெடந்துட்டானுவோ....


ஒவ்வொருத்தனா எழுப்புனேன்...எல்லாவனும் வாறேன் வாறேன்ணுதான் சொல்ளியானுவோ..கடையிவரை வாறம மாதிரி இல்லை....பீரம்மது உனக்கு இதுல வேற தவ்ஹீது பேச்சி... காதர் எல்லாம் முடிச்சாச்சி, இனி தொழாண்டாம்....ஷமிக்கு ஒரு கெட்டு சீட்டு மட்டும் போரும்....நடைங்கோ...எவ்வளவு நாள் இப்புடீ நடக்குதியோண்ணு பாப்போம்....

காரியமெல்லாம் செரி...தொழாம இனி எவனும் தவ்ஹீது, சுன்ன்ததுண்ணு எதாவது பேச்சு கேக்கணும்...அப்போ இரிக்கி... ---சிராஜ் காக்கா டென்ஷனந் ஆனார்....

ஷமீம் இடை மறித்தான்...செரி செரி காக்கா போட்டு...போட்டு காக்கா ...இ்பபோ அடுத்த வேலைய பாப்போம்... அங்க கனிமொழி அறஸ்டாம்...ராஜா உள்ளுக்காம்..எந்று சொல்லி ஷமீம் சிராஜ் காக்காவின் வாயை அடைத்தான்....

கொஞ்சம் கழியும்... என்று சொல்லிவிட்டு வெளியே தட்டக்கேட்ட கதவை திறந்துகொடுத்தார் முஜீபுக்கு...

இரண்டு கையிலும் கீஸ் நிறைய சாப்பாடும் வாங்கிவி்ட்டு தூக்க களியாமல் வந்து நின்றான் முஜீப்...

உள்ளே வந்து பார்த்தால் ஒரு 7 அப் இருந்தது... முஜீப்கேட்டான் யார் வாங்கினா....நான் வாங்கியாச்சே....

சிராஜ் காக்கா சொன்னார், பிரியாணிக்க மணத்துல மயங்கி மஹபூப் வாங்குனது அது...நீ வா...என்ரு சொல்லி...விரித்த பேப்பரில் எல்லாருக்கும் பிளேட் கழுவி எுத்து வந்து எல்லோருக்கும் விளம்பி கொடுத்தார் சிராஜ் காக்கா..

முஜீப் நாசரை கூப்பிட்டான், வாடேய் அடுத்தவாரம் பிரியாணி சூப்பரா வக்கலாம்...இப்போ இதை சாப்பிடு...இது ராயல் மலபார் பிரியாணி....நம்ம ஊர் பிரியாணிமாதிரியே இருக்கும்..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல...இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் அடிச்சி பொளிப்போம் என்று கலகல என சிரித்தவாறே அனைவரும் சோற்றில் கை வைக்க ஷமீம் கேட்டான்,

குரு ஊறுகா இருக்கா......

சிராஜ் காக்கா பொட்டிச்சி்ரி்ததுவி்டடு....இருந்தாலும் ஒனக்கு...என அனைரும் சிரிக்க
அந்த வார வெள்ளிக்கிழமை கடந்துகொண்டிருந்தது...


அன்புடன்

அபூ ஃபஹத்

Dec 7, 2012

ஞாபகங்கள்.....




25 வருடங்களுக்கு முன் ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் நேரம் மாலை 4 மணியிருக்கும், வேகமாக ஓடி எனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் பெரியவர் ஒருவரின் சைக்கிளின் வேகத்தோடு போட்டிபோட்டு ஓட முயற்சித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது என் பாதங்கள் ஏதோ ஒன்றை மிதித்துச் செல்கிறது, என்னை அறியாமலே எனது வேகம் குறைந்தது, ஏதேதோ மனக்குழப்பங்கள், ஓட்டம் நின்று சிறிது நேரம் நடக்கத்துவங்கியபோது மீண்டும் அதே ஞாபகம், மனம் ஒரே இடத்தில் நின்றது. திரும்பிப்போகச்சொன்னது. 

என் கண்களை கடந்துபோனதாக நான் நினைத்த அந்த பொருள் அதே இடத்தில் கிடந்தது, மனம் கேட்கவில்லை, ஏதோ ஒரு பாவத்தை செய்துவிட்ட ஒரு பயம், அதனை மிதித்ததால் அல்லாஹ் பாவம் கெடக்கும் என மனதில் நினைத்து அந்த சிறு துண்டு பேப்பரை எடுத்து கண்களில் ஒற்றி அப்படியே அறிவியல் புத்தகத்தின் நடுவில் வைத்து வீட்டிற்கு வந்து அப்படியே வைத்துவிட்டேன். அதற்குப்பின் தினமும் புத்தகத்தை கையில் எடு்ததாலும் அந்த பேப்பரை மட்டும் களைய மனமில்லை. 

அன்றைக்கு அந்த சிறிய வயதில் என் மனதில் ஏற்படுத்திய சில சிறிய சலனங்கள் அந்த பேப்பரை என் அறிவியல் புத்தகத்தை விட்டு அகற்ற மனம் வராமல் அப்படியே வைக்கச்சொல்லிவிட்டது
அதனை எடு்த்து களையவும் முடியவில்லை, எரிக்க நினைத்தேன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே பல பாதங்கள் பட்டு சிதிலங்களாக இருந்த அந்த சிறு துண்டு பேப்பரில் நான் கண்டு பயந்த விஷயம் அதில் அரபி எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த ஓரிரு வரிகளின் துண்டுகள்...

ஒரு 10 வருடம் கழிந்தபின் எப்போதோ ஒரு நாள் பழைய பொருட்களை எல்லாம் ஒதுக்கி எரிப்பதற்காக என் உம்மா எடுத்து குப்பையில் போடும்போது எனது 5-ம் வகுப்பு அறிவியல் புத்தகம் அதன் ஓரங்கள் சிதிலமாகி ஆங்காங்கே நீள பூச்சிகள் ஓட்டைகள் போட்டு வால்பூச்சிகள் ஓடிக்கொண்டிருக்க நான் படித்த புத்தகம் என்பதையே மறந்து அந்த மஞ்சள் நிற புத்தகத்தின் அட்டையை திறந்தேன், அப்படியே ஒரு பக்கமாய் பிடித்து வேகமாக பக்கங்களை ஓடவிட்டேன், எந்த உதிரி தாள்களோ இல்லாத அந்த புத்தகத்தில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் ஏதோ புதிதாக கண்களுக்க தென்பட நான் அந்த பக்கத்தை அடைவதற்காக மெதுவாக ஒவ்வொரு பக்கமாக மறித்து கடைசியில் அந்த நடுப்பக்கத்தை அடைந்தபோது நான் கண்டது சாதாரணமான ஒரு சிறு துண்டு அரபி பேப்பரை அல்ல. 

அதனை நான் கண்டெடுத்த தருணம், அந்த நேரத்தில் என் மனது பட்ட அவஸ்த்தை, அதன் பின் அதனை தவிற்கவும் முடியாமல், எரிக்கவும் முடியாமல், களையவும் முடியாமல், யாரிடமும் சொல்லாமலுமாக நான் பயந்த அந்த நேரத்தை, அந்த காலத்தை என ஒவ்வொன்றும் புதிரான, ஆச்சர்யமான அனுபவங்களாகவே இருந்தது.

ஆனால் நான் எடுத்துவைத்தபோது அதனை ஒரு குர்ஆனின் ஏதோ ஒரு பக்கத்தின் ஒரு மூலை என்றே நினைத்திருந்தேன். அதனால் ஏற்பட்டவையே அந்த அனுபவங்கள்...

அதனை மீண்டும் கண்டெடுத்த அன்று அது குர்ஆன் எழுத்துக்கள் இல்லை என்று தெரிந்து அது ஒரு அரபி பத்திரிகையின் சிரு துண்டு என்று தெரிந்தபோது கொஞ்சம் என்னை நினைத்து சிரித்தாலும், அந்த நேரமும் எனக்கொரு பயம் இருந்தது..

மீண்டும் கையில் கிடைத்தபோது ஒருவேளை அது குர்ஆனின் ஏதோ ஒரு பக்கத்தின் ஒரு சிறு துண்டு தாளாக இருந்திருந்தால்....???

அன்புடன்

அபூ ஃபஹத்