Sep 29, 2013


பயணம்
********

வீட்டுத்தோட்டம்
வெறித்துப்பாற்கும் - ஒவ்வொரு
முறையும் நான்
வீட்டை விட்டு 
வெளியேறும்போதும்.....

வீட்டுப்படியில் கால்
தட்டினால் போதும் - உள்ளே
வந்துட்டு போ மோனே 
பயணம் சரியில்லைபோல
என்பாள் என் கிழம் 
வாப்பும்மா....

காம்பவுண்ட் கதவையே
நோக்கி நிற்பார் உப்பா - இவ
ஒருத்தி யாராவது வெளியே
போகும்போதுதான் குறை
குடத்தோட வருவா....

எதேச்சையாக என்
கைகளிலிருந்து தவறும்
கார் சாவி பக்கத்து வீட்டு
மாமியை ஏதாவது
பேச வைத்துவி்டும்...

தெருவின் தூரத்து மதிலில்
ஒரு பூனை வலதும் இடதும்
கீழும் பார்த்து நிற்கும் - எனது 
கார் சத்தம் கேட்கும்போது 
முன்னங்கால்களை கீழ்நோக்கி
வைத்து பயப்படுத்தும்.....

வெள்ளையும் சொள்ளையுமா 
காலைலயே எங்கடேய் போறே - கோபத்தின்
நிறம் அப்போதுதான் 
இமைகளுக்குள் வெறி பிடித்து 
நடனமாடிச்செல்லு்ம்...

நானும் கூட வருவேன்
இல்லைண்ணா முட்டாய்
வாங்கீட்டு வரணும் - மகன்
செல்லமாய் அடம்பிடிக்கக்கூடும்....

அம்மாவின் சேலைக்குள் 
முகம்புதைத்து லேசாய்
திரும்பிப்பாற்கும் மகளை
முத்தபிட்டபடி கையசைத்து
வழியனுப்புவாள் மனைவி......

அவள் முகம் பார்த்து திரும்பும்
நொடிப்பொழுதில் சட்டென
கீழிறங்குகிறது சில துளிகள்
பயணத்தின் ஆரம்பம்
அழகான ஆனந்தமாய்.....

Sep 13, 2013


ஹலோ...கொஞ்சம் நில்லுங்க...!!

யாருண்ணு புரியலையே....??

நீங்கதானே அவர்...என என் பெயர் சொல்லி கேட்டார்...


உங்களை எனக்கு நல்லா தெரியும், உங்கள கவிதைகளை நான் படித்திருக்கிறேன்...

அப்டியா...ரொம்ப நன்றி... என்னோட Blog பார்த்தீங்களோ...??

இல்ல... அவ்வப்போது வரும் நிகழ்வுகளைப்பற்றி நீங்கள் எழுதும் கருத்துக்களையும் நான் ரசித்திருக்கிறேன்...உண்மையிலேயே எனக்கு ரொம்ப புடிக்கும்...

ஓ... நீங்க யாருண்ணு தெரிஞ்சிக்கணும்ணு ஆசைப்படுறேன்...

நான் சொன்னாலும் உங்களுக்கு புரியாது..நான் பக்கத்து ஊர்தான் என்றாலும் எப்படி சொல்றதுண்ணு தெரியல...

ஃபேஸ்புக்ல உங்களை பார்த்திருக்கேன், அதுலதான் உங்க கவிதைகள் ஸ்டேட்டஸ்கள் பார்த்திருக்கேன்...

நீங்க விவாதம் பண்றதும் எல்லாமே சூப்பர்... உங்களை சந்திக்கணும்ணு ரொம்ப ஆசைப்பட்டேன்...இண்ணக்கி அது நடந்திட்டு பாத்தீங்களா...

சரி...சரி...இப்போ எங்கே போறீங்க...??

சும்மாதான் கடைக்கு வந்தேன்...நீங்க எங்க இந்தப்பக்கம்...??

நானும் சில பொருட்கள் வாங்கத்தான் வந்தேன்...

நீங்க இவ்வளவு புகழ்துமளவுக்கு நான் பெருசா ஒண்ணும் எழுதலியேங்க..

என்னைவிட அதிகம் ஆதங்கமும், விஷயமும் தெரிந்த ஆயிரக்கணக்கானோர் இப்போதும் அங்கே சும்மாதான் இருக்காங்க...

அப்டியெல்லாம் இல்லண்ணே.. நீங்க எழுதுறதுக்கும் மத்தவங்க எழுதறக்கும் வித்தியாசம் இருக்குண்ணே....நீங்க எழுதுற எதையும் கொஞ்சமும் தப்பு சொல்ல முடியாது....



சரி பாப்போம்... எனக்கு கொஞ்சம் அர்ஜெண்டா போகணும் என்று கூறி அந்த தெரியாத மனிதரிடமிருந்து விடை பெற்றேன்....


ஏதோ பெரிய்ய ஒரு வேலை முடிந்ததைப்போல் மனதில் நினைத்தாரோ என்னவோ, உடன் வந்தவரிடம் என்னை எப்படி அறிவாரோ அந்த பெயரைச்சொல்லி, இவர்தான் அவர் என்று பெருமையாக பேசி சந்தோஷப்பட்டுக்கொண்டே சென்றார்....


என்னை விட்டு அவர் சில அடி தூரங்கள் கடந்தபோது அவரை நான் கேட்க நினைத்த கேள்விகளை மனதில் யோசித்துக்கொண்டேன்...


என்ன இவர், என்னை இப்படி புகழ்ந்துகொண்டே செல்கிறார்....??

உங்களுக்கு எனது எல்லா எழுத்துக்களும் பிடித்திருந்ததா...?? நான் தவறாகவே இதுவரை எவுதவில்லை என்கிறீரே...??

எனது எழுத்துக்களில், எனது கவிதைகளில், எனது கோணங்களில் தவறுகளோ, கோபமூட்டுவதோ இல்லாமலா இருந்திருக்கும்...??


நான் எத்தனை மோசமாக எழுதியிருக்கிறே்ன்...எத்தனை மோசமாக விமர்சித்திருக்கிறேன்.. எத்தனை கருத்துக்கள் தவறானவை...நானே உணர்ந்து மன்னிப்பு கேட்டதுண்டு..நானே உணர்ந்து திருத்திக்கொண்டதுண்டு...

இன்னுமா நான் முழுமையாக தவறவில்லை....

எப்படி இவர் புகழ்கிறார்..என்னை நானே குற்றம் சொல்லியிருக்கிறேனே...இவர் என்னை குற்றமே  இல்லை என்கிறாரே....இதவென்ன புகழ்ச்சி....


அறிமுகம் உள்ளவரோ இல்லாதவரோ, உங்களிடம் இந்த தவறு எனக்கு பிடிக்கவில்லை, இந்த சரி பிடித்திருக்கிரது...நீங்க விமர்சித்ததில் சிலதில் தவறிருக்கிறது, அதை உண்ரந்துகொண்டதில் நான் பாராட்டுகிறேன்...நீங்க ஏன் சிலநேரங்களில் உணற்சிவசப்படவேண்டும்...என்று எதையும் சொல்லாமல், ஒரேமாதிரியான பாராட்டு எனக்கு சந்தேகத்தை தருகிறதே.


என நான் சில மணித்துளிகள் என்னை நானே கேட்டுக்கொண்டு...

நீ யாரையும் இப்படி புகழாதே என நான் என்னை சொல்லி்ககொண்டேன்...