நிஜங்கள்



உற்ற நண்பன்...



 
மனிதன் தன் வாழ்க்கை தேவைக்கான பொருளாதார தேடலுக்கு மத்தியில் தனது ஆசை, அன்பு, நேசம், என அனைத்தையும் மறந்து போய்க்கொண்டிருக்கிறான். மனித வாழ்க்கை சில நம்பிக்கையின் அடிப்படையிலேதான் சென்றுகொண்டிருந்தது நமது முந்தைய நாட்களில், தற்போது அதுவும் கேள்விக்குறியாகவே மாறிப்போயிருக்கிறது.

சமீபத்திய நாட்களில் மனிதன் தன் ஏதாவது சில தேவைகளுக்காக மட்டுமே மற்றவர்களுடன் அன்பு காட்டுதல், உறவாடுதல், அல்லது அதிகம் பழகுதல் என தேவைக்காகச் செய்கிறான். தனது தேவைகள் முடிவடையும்போது அந்த வழியையே மறந்துவிடுவதும் சர்வசாதாரணமாகிவிட்ட ஒன்று. இது ஒரு சாதாரண உலக நடைமுறையாகிவிட்டது என்றே சொல்லலாம். மனிதனின் இன்றைய அவசர உலகில் பொருள் தேடலைத்தவிர வேறு எல்லா தேடல்களையும் மறந்துபோயிருக்கிறான். 

இங்கே இது பற்றியெல்லாம் நிறைய எழுத வேண்டியதில்லை, ஆனால் மனித உறவுகளில் எக்காலத்தும் தனித்தன்மையாக விளங்குவது ஒரே ஒரு உறவுதான். தந்தை மகன் உறவை விட, தாய் பிள்ளை உறவை விட மிகவும் முக்கியமானதும் புனிதமான உறவாக மதிக்கப்படுவதும் இன்றும் ஒன்றே ஒன்று மட்டும்தான். அது நட்பு ஒன்றுதான். தாய் இல்லாதவர்கள் உண்டு, தந்தை இல்லாதவர்கள் உண்டு, தாயும் தந்தையும் சகோதர சகோதரிகள் உறவுகள் இல்லாதவர்கள் கூட இருக்கிறார்கள், ஆனால் ஏதாவது ஒரு நட்பு மட்டும் அவர்களது மரணம் வரை அவர்களுடனேயே பயணிக்கும். நட்பு பல வகையில் அமைகிறது, அது வேறு விஷயம். ஆனால் நான் இங்கே சொல்ல நினைப்பது உற்ற நண்பன் (Intimate Friend) பற்றியது.



சாதாரணமாக நண்பர்கள் எல்லோருக்கும் நிறைய உண்டு, ஆனால் உற்ற நண்பன் ஒரே ஒருவன்தான் இருக்கமுடியும்.  கண்டிப்பாக அது இரத்த பந்தங்களாக இருப்பதில்லை. எனது இன்ப துன்பங்களை, எனது மிக மிக ரகசியமான பிரச்சினைகளை, எனது குடும்பம் சம்மந்தமான விஷயங்களை, எனது வியாபாரம், மற்றும் வேலை சம்மந்தமான விஷயங்கள், என எனது எல்லா செயல்பாடுகளையும் என்னால் யாராவது ஒருவரிடம்தான் முழுமையாக பகிர்ந்துகெள்ள முடியும், அப்படி பகிர்ந்து கொள்ள நான் தேர்ந்தெடுக்கும் நல்ல மனிதர், எனது ரகசியங்களை எந்த நிலையிலும் அதாவது எனக்கும் அந்த நண்பருக்கும் ஏதாவது விஷயத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிய நேர்ந்தால் கூட எனது ரகசியங்களை,பிரச்சினைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாது தனது பிரச்சினையாக,தனது சொந்த விஷயங்களாக உனர்ந்து அதனை பாதுகாப்பவராகத்தான் இருக்கவேண்டும். ஒரு உற்ற நண்பன் என்பவன் தனது நண்பனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவனின் இன்ப துன்பங்களில் அவனுடன் பயணித்து அவனுக்கு ஆறுதலாக இருப்பவனாக இருக்கவேண்டும்.  இதற்கு பல விதமான உதாரணங்களோ புதிய இலக்கணங்களோ எனக்கு சொல்லத்தெரியாது, காரணம் நான் நட்பை வெறும் நட்பாக பாற்பது குறைவு, ஒரு மனிதன் ஏதாவது விஷயத்தால் பாதிக்கப்படும்போது அதனை தாயிடம் சொல்லி ஆறுதல் அடையலாம் என நினைப்பான், விஷயம் தாயின் மனதை காயப்படுத்தக்கூடியதாக இருப்பின் அது இன்னும் வலியை அல்லவா உண்டாக்கும், ஆனால் யாரிடமும் கொட்டித்தீர்துவிடவும் முடியாது அந்த நேரத்தில் நமக்கு மிகவும் உதவியாக இருப்பவன் நமது உற்ற நண்பன்தான். நமது உறவுமுறைகள் முதல் சாதாரண பொருளாதார விஷயங்கள் வரை நாம் எந்த பயமும் இல்லாமல் பகிர்ந்து கொள்வது நண்பனிடம் மட்டும்தான். நமது எல்லா பிரச்சினைகளுக்கும்  ஒரு தீர்வு அவனுடைய ஆறுதலிலிருந்து, அவனுடைய ஆலோசனையிலிருந்து அவனுடைய அரவணைப்பிலிருந்து அவனின் வார்த்தைகளிலிருந்து கண்டிப்பாக கிடைக்கும். இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான், நம்பிக்கை. நட்பின் முக்கிய கருவே நம்பிக்கைதான். நான் அவனை நம்பவேண்டும், அவன் எனது நமபிக்கையில் நம்பிக்கை கொள்ளவேண்டும். அதற்கு வேறு காரணங்கள் கூற வேண்டிய  அவசியம் ஏற்படக்கூடாது. ஆனால் மேற்கூறிய நிலைகளில் தற்போது நட்பு நமது சமூகத்தில் இருக்கிறதா என்றால் உண்மையிலேயே அது சந்தேகமாகவே உள்ளது. காரணம் பல நண்பர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் வேறுபாடுகள், கருத்துவேறுபாடுகள் வெறும் அற்ப விஷயங்களில் நடந்தேறிவிடும்போது அந்த நட்பில் உண்மையில்லையோ, நம்பிக்கை எனும் மிகப்பெரிய கருவானது பொய்யோ எனத்தோன்றிவிடுகிறது. ஒன்றுமே இல்லாத எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு விஷயத்திற்காக நமது பல வருட நட்பின் அடையாளமாக இதயங்களில் பாதுகாத்து வைத்திருக்கும் நண்பன் பற்றிய ரகசியங்களை அந்த நண்பனுக்கே பிடிக்காதவர்களிடம் விளம்பிவிட்டு அந்த விஷயத்தை அவனுடன் பரிகசித்து மகிழ்வதும் பின்னர் இவை எதுவும் நான் சொன்னதாக யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கூறுவதும் எவ்வளவு கீழ்த்தரமான விஷயங்கள்.

என்னைப்பாறுத்தவரை இரு நல்ல நண்பர்களுக்கிடையில் ஏதாவது ஒரு அற்ப விஷயம் கருத்து வேறுபட வைக்கிறதென்றால் அந்த நண்பர்கள் நல்ல நண்பர்களே அல்ல என்றுதான் கூறுவேன். இரண்டு நண்பர்களின் நல்ல நட்பு பிடிக்காமல் போக அவர்களின் நட்பின் மீது எரிச்சல் ஏற்பட்டு அந்த நண்பர்களில் ஒருவரிடம் யாரோ ஒருவர் சின்னதாய் கெழுத்திவைக்கும் திரியை அந்த நண்பர் நம்பி அந்த திரையை கொழுந்து விட்டு எரியச்செய்து தனது நண்பரிடம் கருத்து வேறுபட்டிருப்பதற்கான காரணத்தையோ, அல்லது பேசாமல் இருப்பதற்கான காரணத்தையோ கூறாமல் தர்ம சங்கடமான நிலைமைக்கு ஆளாக்குவது மிகவும் கொடுமை. தனது உற்ற நண்பன் தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று யாராவது சொன்னால் அதனை அப்படியே நம்பி விடுவது முட்டாள்த்தனம், சில விஷயங்கள் 100 சதவிகிதம் உண்மையாகவே தோன்றும், காரணம் நாம் நமது மனதில் யாரோ ஒருவர் சொன்ன சாதாரண அவதூறை ஆழமாக பதிய வைத்து அது நிமிட நேரத்தில் ஒரு பெரும் மரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு நிற்பதால் நமக்கு நமது உற்ற நண்பன் உலக எதிரியாக காட்சியாகிறான். இதன் பின்னர் நடப்பதெல்லாம் ஒரு நிமித்தமாக நடந்தேறும், அது அனைத்தும் நமது பிரச்சினைக்கு ஒத்துப்போவதாய் தோன்றும். மனோவியல் தத்துவமும் அதைத்தான் சொல்கிறது. நாம் சில விஷயங்களை கண் மூடித்தானமாக நம்ப ஆரம்பித்துவிட்டால் நடப்பவை எல்லாமே நமக்கு நாம் எதிர்பார்ப்பபதைப்போல்தான் நடக்கும். 



பிரச்சினைகள் ஏற்பட காரணமானவர்கள் ஏதாவது அற்பத்தனமான எந்த சாரமுமே இல்லாத ஒரு விஷயத்தை நாசூக்காக பழத்தில் ஊசியாய் ஏற்றிவிட்டு தயவுசெய்து நான்தான் இந்த விஷயத்தை உன்னிடம் சொன்னேன் என்று சொல்லிவிடாதே, மனிதர்களை பற்றி நீ தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன், மாறாக நீ இந்த விஷயம் பற்றி அவனிடம் எதுவும் கேட்கவேண்டாம், நீ தெரிந்துவைத்துக்காண்டால் போதும் சத்தியமாக ஏதுவும் கேட்டுவிடாதே என்றும் வாய்தா எடுத்துக்கொள்கிறார்கள்.

இது பொதுவாக நல்ல நண்பர்கள் வட்டாரத்தில் சகுனிகளாக நடப்பவர்களுக்கு சாதாரண வேலை. இவர்கள் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுபவர்கள். தனை நம்பி சோரம்போகும் நண்பர்கள் அப்பாவிகளா, அல்லது சிந்திக்க தெரியாதவர்களா என்று புரியவில்லை. இஸ்லாம் இப்படி சொல்கிறது. வ (Q)கூலு Qகெளலன் சதீதா. சொல்வதை நேரடியாக தெளிவாக சொல்லுங்கள் என்று. ஒருவர் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லிவிட்டு அவனிடம் கேட்காதே என்று சொல்லிவிட்டால் அப்படியே விட்டுவிடாதீர்கள், அதற்காக அதில் எதுவும் உண்மையில்லை என்று ஒதுக்கியும் விடாதீர்கள். சொன்னவரும் யாரைப்பற்றி சொன்னாரோ அவரும் ஒன்றாக சந்திக்கும் காலம் வரை பொறுத்திருங்கள். அல்லது இருவரையும் தொலைபேசியிலோ அல்லது உங்களுக்கு ஏதுவான ஏதாவது ஒரு ஊடகம் வழியாகவோ தாடர்பு காண்டு மூவரும் ஒன்ராய் பேசும் வசதியை ஏற்படுத்தி நேரடியாக கேளுங்கள். உண்மைகள் எப்போதும் மறைத்துவைக்க முடியாத ஒன்று. இருப்பினும் எந்த ஒரு விஷயத்தையும் செய்யும்போது பாறுமையாகவும்,நிதானத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவது சாலச்சிறந்தத்து. சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நான் வெறுத்துப்போன விஷயம் ஒன்று உண்டு. வேறான்றுமல்ல, என்னுடைய பால்ய கால நண்பன் பல வருடங்களாக தாலைபேசியிலேயே தெடர்பு காண்டுவருகிறேன். அவனுடைய உற்ற நண்பன் நான், அவனுடைய எல்லா விஷயங்களும் இன்றும் என் மனதில் ரகசியமாக பாதுகாத்து வருகிறேன். அவனும் அப்படித்தான், ஆனால் திடீரென சில காலங்களாக என்னுடனான தொடர்புகளை குறைத்துக்கொண்டு கழிந்த சில மாதங்களாக அறவே தொடர்பறுந்துபோனதுபோல் ஆகிவிட்டான். நான் தாலைபேசியில் தாடர்பு காள்ளும்போதெல்லாம் அவன் அதற்கு சட்டை செய்வதே இல்லை. நானும் அப்படியே விட்டுவிட்டாலும் என்னால் அதனை உட்காள்ள முடியவில்லை. நான் ஏதாவது தவறு செய்திருப்பேனோ என்று முடிந்தவரா ஞாபகம் வருத்சது பார்த்துவிட்டேன், என்கு என் அறிவிற்கு எதுவும் எட்டவில்லை. என்னுடைய பல நண்பர்கள் இது பற்றி என்னிடம் கேட்டபோதும் நான் ஒருபோதும் தொடர்பறுந்ததாய் காட்டிக்கொள்ளவே இல்லை. நான் ஊருக்கு சென்று திரும்பிய பின்னர் ஒரு நாள் எதேச்சையாக வேறு ஒரு நண்பர் ஊரிலிருந்து தொலைபேசியில் அவருக்கான தாழில் சம்பந்தப்பட்ட விஷயம் கேட்பதற்காக என்னிடம் பேசிக்கெண்டிருந்தார். அவனுடைய விஷயங்கள் பேசி முடிந்தவுடன் என்னிடம் கேட்டார் நீ ஏன் உனது உற்ற நண்பனுடன் பேசுவதில்லை என்று. நான் சான்னேன், அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் அடிக்கடி பேசிக்காள்வதுண்டு என்று. அப்போது அவன் என்னிடம், பாய் சொல்லாதே உனது நண்பன்தான் என்னிடமே சொன்னான், நீ ஏதோ இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டதாக என்று. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இது எப்போது நடந்தது என்று. ஆனால் நான் அதனை விடுவதாக இல்லை, நான் இந்த விஷயத்தில் நிரபராதி என்பதை தெளிவுபடுத்தவேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். அந்த நண்பரிடம் கூறினேன் இப்போதைக்கு தாலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து கூப்பிடுவேன் என்று. 

அதன்படி நான் எனது அலை பேசியில் கொஞ்சம் அதிகமாக காசு போட்டுவைத்துவிட்டு காலையில் அழைத்த அந்த நண்பரை மீண்டும் அழைத்தேன். அழைத்து முழு விஷயத்தைடும் கேட்டுவிட்டு, அந்த நண்பரிடம் அப்படியே தொடர்பில் இருந்துகொண்டே எனது உற்ற நண்பனை நான் தொடர்பில் இருப்பதை சால்லாமலே அழைக்கச்சான்னேன், முதலில் தயங்கினாலும் எனது நிலைமையை புரிந்துகாண்ட அந்த நண்பர் அப்படியே செய்தார். அழைத்து முழுமையாக விஷயத்தை கேட்டுவிட்டு நான் தொடர்பில் இருந்து கேட்டுக்காண்டிருப்பதாகவும், என்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை உங்கள் இருவருக்கிடையிலான பிரச்சினையின் உண்மை நிலை இருவரும் அறியவேண்டும் என்ரும் கூற நான் மெதுவாக என் நண்பனிடம் பேசலானேன், கடைசி வரை பிரச்சினைக்கான காரணம் சால்லவே இல்லை. நீ என்னைப்பற்றி மோசமாக ஒராளிடம் சால்லியுள்ளாய், எல்லாம் எனக்கு தெரியும், ஆனால் நான் சால்லமாட்டேன், சான்ன ஆளையும் சால்லமாட்டேன் என்று சால்ல நான் எதுவும் யாரிடமும் சால்வில்லை எந்ரு மறுக்க மிகப்பெரிய வாக்குவாதம் முற்றி, இதனை பாறுமையாக கேட்டுக்காண்டிருந்த அந்த நண்பர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். சான்னவர் யாரோ அவரை இப்போதே இப்படியே தாடர்பு காள்வோம் எந்ரு சால்ல, அதற்கு முடிந்தவரை மறுப்பு தெரிவித்துவிட்டு, நான் அந்த ஆளுக்கு சத்தியம் சய்து காடுத்துள்ளேன் ஆதலால் வேண்டாம் என்று சொல்ல, ஒரு நல்ல பந்தம் முறிவதை காப்பாற்ற கொஞ்சம் அந்த சத்தியத்தை தளர்த்தலாம் என்று சொல்ல, கடைசியில் அந்த நபரின் பெயரைச்சொன்னான். 



நானும் எனது நண்பனும் எதுவும் பேசாமல் இருக்க எங்களுக்கிடையில் மாட்டிக்காண்ட நண்பர் அந்த நபரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துவிட்டு, வேறு கொஞ்சம் விஷயங்களும் பேசிவிட்டு, மெதுவாக எங்கள் விஷயத்தைப்பற்றி கேட்கலானார்,, என்னடேய் அவர்களுக்குள் பிரச்சினை... அழனுவளை போகச்சால், ரெண்டு பேரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், தேவயில்லாம பிரச்சினையை கிளப்புவதும்தான் அவர்கள் வேலை என்று சொல்ல, நீதான் ஏதோ சொன்னியாம், அவன் இவனைப்பற்றி யாரிடமோ மோசமாக சொன்னதாகவும், அதனை அந்த ஆள் உன்னிடம் சொல்ல, நீ அதனை கேட்டு பொறுக்கமுடியாமல் உடனே அவனிடம் சொன்னதாகவும் யாரிடமும் நான் சொன்னதாக சொல்லவேண்டாம் என்று சத்தியம் வாங்கியதாகவும் அவன் சொன்னான் என்று சொல்ல, அந்த நபர் கோபத்தில் கிறுக்குப்பயல், அப்படியா சென்னான், அவனுக்கு இதே வேலை, அவன்தான் இவனைப்பற்றி இந்த விஷத்தையே என்னிடம் சொன்னான் என்று சொல்ல, எனது நண்பனுக்கு கோபம்வந்து விட்டது. திருட்டு றாஸ்கல், நாதாரிப்பயலே என்று கோபத்தில் கொப்பளிக்க அவன் அப்படியே விக்கித்து, என்னடா நீ ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை என அவனிடம் கேட்டுவிட்டு கபத்திலும்,வெட்கி தாலேசியை வைத்துவிட்டான்.
 எனது நண்பன் அழுதேவிட்டான், மன்னித்துவிடு, உன்னை தப்பாக நினைத்துவிட்டேந், நான் அன்றைக்கே கேட்டிருக்கவேண்டும், அது விட்டுவிட்டேன், எனது தப்புதான் என்ரு சொல்லி அழுதபோது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் நானும் கொஞ்சம் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிப்போனேன். என்னதான் நான் நிரபராதி என தெளிவு படுத்தினாலும் எனது நண்பன் மீது அந்த பழைய நிலையிலான நட்பை தாடர மனம் இடம் தரவில்லை. காரணம் என் நட்பு மீதான நம்பிக்கை அவனுக்கு போய்விட்டது என்றே நான் உணர்கிறேன், மட்டுமல்ல என் மனதில் எங்களை பிரிக்க நினைத்தவன் மீது ஏற்பட்ட கோபத்தைவிட மிகவும் வருத்தத்தை எனது நண்பன் மீதான அவ நம்பிக்கை ஏற்படுத்திவிட்டது...



உற்ற நண்பன் மீதான நம்பிக்கை இழந்துவிட்டால் அவர்களுக்கிடையிலான நட்பே கேள்விக்குறியாகிவிடும்...



என்றும் அன்புடன்



அபூ ஃபஹத்

தம்மாம்.