Nov 22, 2012

காலம் சென்றவர்கள்......


காலம் சென்றவர்கள்......

தெக்கூட்டு பெருவெட்டர்
பெரிய சண்டிதான் - அண்ணக்கெல்லாம்
அவர் நடந்தாலே அந்த
தெருவெல்லாம் நடுங்கும்....

பெரிய மீசை சாவன்னாவின்
பெயர் சொன்னா பெத்த
கொழந்தையும் பதறும் - அவர்
பாசத்துக்கு முன்னால பயம்
எல்லாமே பறந்து போயிரும்...

ஆலடி காக்கா மரிச்சி
ஒம்பது வருஷமாச்சி - அவரு
இடுப்புல எப்பவும் வச்சிருந்த
கத்தியை இப்ப பாத்தாலும் பேடிதான்....

ஆறு கட்டை பேட்டரி லைட்டு
ஐமக்கண்ணு உப்பா - ஓங்கினா
எவனும் கிட்ட நிக்கமாட்டான்
தெறிச்சிருவானுவோ....

எந்த சண்டை வந்தாலும்
ஒத்த ஆளா போகும் பெல்ட்
செய்தும்மு காக்கா - ஒருத்தருக்கும்
அடங்காது பேரப்புள்ளைய தவிர....

ஒரு லோடுல மூணு சாக்கு அரி
வச்சி சவட்டும் - பெரிய
கேரியலு உள்ள சைக்கிளு
அய்யாளு போனதோட அதுமாரி
சைக்கிளும் இல்லாம போச்சி.....

இருவத்தஞ்சி மைலுண்ணாலும்
ஒரு எத்துல நடந்து போகும் மரிச்சிப்போன
அவ்வக்கரு உப்பா - எல்லா
சந்தைலயும் அவரு பெரிய ஆளுதான்
இப்பெல்லாம் யாரு நடக்குறா....

இப்படி அடையாளங்களை
அடை மொழிகளாய் தந்தது
காலம் சென்றவர்களின்
காலடிச்சுவடுகள்....

நேற்றும் யாரோ இறந்ததாய்
தகவல் வந்தது - மிகவும்
பரிச்சயமானவராம் எனக்கு
எனினும் அவரை அறிந்துகொள்வதற்கு
அடையாங்கள் போதவில்லை....

கைகளில் கத்தியோடும்
கர்ஜிக்கும் குரலோடும் நிறையபேர்
நம்மைச்சுற்றிய பகுதிகளில் - ஆயினும்
சொல்லிக்கொளும்படியாய் அவர்களிடம்
எதுவுமில்லையோ என தோன்றுகிறது...

மிடுக்கு நடையும் மிரட்டும் மீசைகளும்
நேரிய தாடியும் நிறையவே தைரியமும்
காலம் சென்றவர்களில்
அடையாளங்களாகிப்போனது
அவர்களே அறிந்திராமல்
அழகாய் ஒட்டிக்கொண்டவை....

யாரும் மறந்திடாதபடி
நூற்றாண்டின் அடையாளங்கள்
தலைமுறைகளாய் பரிமாறப்படுவது
வெறுமனே அல்ல - சில
விலைமதிப்பற்ற அடையாளங்களாய்
உறவுகள் அறியப்படுவதற்காய்......



அபூ ஃபஹத்

காலம் சென்ற அடையாளங்கள்....

தெக்கூட்டு பெருவெட்டர்
பெரிய சண்டிதான் - அண்ணக்கெல்லாம்
அவர் நடந்தாலே அந்த
தெருவெல்லாம் நடுங்கும்....

பெரிய மீசை சாவன்னாவின்
பெயர் சொன்னா பெத்த
கொழந்தையும் பதறும் - அவர்
பாசத்துக்கு முன்னால பயம்
எல்லாமே பறந்து போயிரும்...

ஆலடி காக்கா மரிச்சி
ஒம்பது வருஷமாச்சி - அவரு
இடுப்புல எப்பவும் வச்சிருந்த
கத்தியை இப்ப பாத்தாலும் பேடிதான்....

ஆறு கட்டை பேட்டரி லைட்டு
ஐமக்கண்ணு உப்பா - ஓங்கினா
எவனும் கிட்ட நிக்கமாட்டான்
தெறிச்சிருவானுவோ....

எந்த சண்டை வந்தாலும்
ஒத்த ஆளா போகும் பெல்ட்
செய்தும்மு காக்கா - ஒருத்தருக்கும்
அடங்காது பேரப்புள்ளைய தவிர....

ஒரு லோடுல மூணு சாக்கு அரி
வச்சி சவட்டும் - பெரிய
கேரியலு உள்ள சைக்கிளு
அய்யாளு போனதோட அதுமாரி
சைக்கிளும் இல்லாம போச்சி.....

இருவத்தஞ்சி மைலுண்ணாலும்
ஒரு எத்துல நடந்து போகும் மரிச்சிப்போன
அவ்வக்கரு உப்பா - எல்லா
சந்தைலயும் அவரு பெரிய ஆளுதான்
இப்பெல்லாம் யாரு நடக்குறா....

இப்படி அடையாளங்களை
அடை மொழிகளாய் தந்தது
காலம் சென்றவர்களின்
காலடிச்சுவடுகள்....

நேற்றும் யாரோ இறந்ததாய்
தகவல் வந்தது - மிகவும்
பரிச்சயமானவராம் எனக்கு
எனினும் அவரை அறிந்துகொள்வதற்கு
அடையாங்கள் போதவில்லை....

கைகளில் கத்தியோடும்
கர்ஜிக்கும் குரலோடும் நிறையபேர்
நம்மைச்சுற்றிய பகுதிகளில் - ஆயினும்
சொல்லிக்கொளும்படியாய் அவர்களிடம்
எதுவுமில்லையோ என தோன்றுகிறது...

மிடுக்கு நடையும் மிரட்டும் மீசைகளும்
நேரிய தாடியும் நிறையவே தைரியமும்
காலம் சென்றவர்களில்
அடையாளங்களாகிப்போனது
அவர்களே அறிந்திராமல்
அழகாய் ஒட்டிக்கொண்டவை....

யாரும் மறந்திடாதபடி
நூற்றாண்டின் அடையாளங்கள்
தலைமுறைகளாய் பரிமாறப்படுவது
வெறுமனே அல்ல - சில
விலைமதிப்பற்ற அடையாளங்களாய்
உறவுகள் அறியப்படுவதற்காய்......

Nov 15, 2012

ஒரு வயோதிகத்தாயின் படுக்கையறை....


 
ஒரு வயோதிகத்தாயின் படுக்கையறை
******************************

ஈரெட்டு ஆண்டுகளாய் நான்
தொடர்ந்து படுக்கையில் - எனை 
சுமந்து நிற்கும் கட்டிலின்
கால்களுக்கு இதுவரை வலித்ததாய்
சொல்லவில்லை எல்லோரும்
சலித்துக்கொள்வதைப்போல....

நான் விசிறித்தீர்த்த ஒலைக்கீற்றில்
வெறும் ஈற்கல்கள் மட்டுமே - எனினும்
அவை எனக்காய் வசந்தம் வீசுவதை
நிறுத்தவில்லை பலரும்
நிமிடங்களுக்குமேல் இருக்க மறுக்கும்
என் வசந்த அறையில்...

என் கை விரல்களை என்னால்
பார்க்க முடிவதில்லை - ஆயினும்
என் விரல்களில் ஒராயிரம்
நரம்புகள் விரல்களைப்போலவே
வெளித்தெரிகின்றன...

ஆசை மகனுக்கும் வேண்டாம்
பாச மகளுக்கும் வேண்டாம் நான் - ஜடங்களை
வீட்டில் வைத்து யார்
பார்ப்பார் எனும் மருமகளின்
வார்த்தைகள் வாஸ்த்தவம்தானே...

நான் அழுதாலும் யாரும்
அறிவதில்லை -சதா நீர் வடியும்
என் கண்களில் உணர்வுகளுக்கு
நிறமா என்ன....

தலைமுறைகள் கடந்து
அறுபதுக்கும் மேல்
பிறசவம் பார்த்தவள் நான் - என்
பெயர் சொல்லக்கூட நாதியற்ற
பெரும் பேறு கொண்டவளாய்....

எப்போது கூன ஆரம்பித்தேன்
என எனக்கே தெரியவில்லை - இப்போதும்
தளராத மனதில் தயக்கங்களோ
துயரங்களோ இல்லை வெறும்
உடல் வலிமையைத்தவிர.....

எனது விழிகள் இழந்த ஒளியும்
என் காதுகள் இழந்த ஒலியும்
இன்னும் என்னில் பத்திரமாய்
இருக்கிறது பொக்கிஷங்களாய் - யாருமற்ற
என் வாழ்க்கையில் அவ்வப்போது
பார்த்தும் கேட்டும்
அதிசயிக்கத்தான் செய்கிறேன்.....

யாரோ என் அருகில் ஏதோ ஒரு இரவில்
வந்த கனவு பற்றி பேசினர் - வெறும்
கனவுகள் மட்டும் வாழ்க்கையாகிப்போன
எனக்கு வேடிக்கையாகவே போனது....

நான் விளித்திருக்கும்போது யாரும்
என் அருகில் வந்து பார்ப்பதில்லை - நான்
தூங்கும்போதெல்லாம் வந்து செல்பவர்கள்
தொடர்ந்து சொல்லிச்செல்கின்றனர்
"அவங்க தூங்குறாங்க தூங்கட்டும்
அப்புறம் பாக்கலாம்" என்று....

இதுவரை மரணித்த பலரில்
நான் மரணிக்கவில்லையே என
வருத்தம் கண்டவருண்டு - மரணத்தின்
முன்னால் முதுமைக்கு வரையறை
இல்லைபோலும்.....

அவஸ்த்தைகளில் கொடுமை
படுக்கையிலேயே வாழ்க்கை - கொஞ்சம்
அமுதமாய் விஷம் கிடைப்பின்
நான் ஆயுளை முடிக்கலாம் எனினும்
படைத்தவனின் கையில்
பத்திரமாகிப்போன நான்
மரணம் யாசிப்பதென்னவோ தறுதான்...

அபூ ஃபஹத்....

Nov 4, 2012


ஹலோ...ஹலோ...றஃபீக் எங்கடா இருக்க..?

ஹலோ..சொல்லு சொல்லு மச்சான்..என்ன என் விஷயம்...

 இல்ல மப்ள இண்ணக்கி வீக் எண்டுல்ல.., மத்தியானமே டியூட்டி முடிஞ்சிடிச்சி..அதான் போண் பண்ணினேன்...நீ ஃபிறீயா...

இல்லடா இன்னும் முடியல, 7:30 ஆயிடும், என்ன விஷயம்...என்னடா மச்சான் சொல்லு...என்ன விஷயம்...

ஒண்ணுமில்லடா நைட் அபுதாபில இருந்து அஸ்கர் வாறேண்ணு சொன்னான்.. அப்புறம் ஷஃபீக் வருவான், அன்சார் மத்தியானமே வந்து என் உயிரை எடுக்கிறான்... நீ வயேன், வந்தா நல்லா இருக்கும், கழிஞ்ச வாரம் நீ ஏமாத்திட்டே...சரி வருவியா மாட்டியா...

நான் டிறை பண்றேன் மாப்ள...இனி வீட்டுக்கு போய், டிறஸ் எல்லாம் கழுவணும், அப்புறம் எத்தனை மணிக்கு புறப்பட்டு எப்போ வர்றது மாப்ள...நான் வரலடா மச்சான்....

என்ன நீ இப்டி சொல்றே..நீ வர்றே... அவ்வலவுதான்...நோ பிராப்ளம் நான் வெயிட் பண்றேன்...

சரி மச்சான், நீ கோபப்படாத, நான் ஒரு 8:30-க்கெல்லாம் வந்துடறேன்...

ஓ.கேடா மாப்ள...

--
வாடா அஸ்கர், சாதனம் வாங்கீட்டு வந்திருவோம்...

என்னது வாங்கணும், எல்லாம்தான் றூம்ல இருக்கே...அதில்லடா இண்ணக்கி கொஞ்சம் நல்லா டிரை பண்ணலாம்ணு பாக்கறேன்...டேய் நீயே கஷ்டப்படுறே இதுல வேற இவ்வளவு செலவு பண்ணவேண்டிய தேவை எதுக்கு...இருக்கிறது போதும், 5 பேர் தானே...

இரவு 9 மணி, றஃபீக் வந்தவுடன் காமில் மகிழச்சியில் சத்தம் போட்டான், இருந்தாலும் உனக்கு பந்தா ஓவர்டா றஃபீக், வாறியாண்ணு கேட்டா வரணும், அதை விட்டுட்டு ரீல் வேற...

வா..வா..

றூமுக்கு போறதுக்கு முன்னால சொல்லு, அவனுங்க ஓ.கே.. உனக்கு என்ன வேணும்...

எல்லாரையும் போல போதும், எனக்குண்ணு ஸ்பெஷியல் எதுதவும் வேண்டாம்...

சரி எவ்வளவு வாங்கலாம்... 1 ஃபுள் போதாது, 2 ஃபுள்...

டேய் மச்சான் என்னடா தேவையில்லாம் காசை கரியாக்குறே... 5 பேருக்கு 1 புள் போதும் கறெக்டா இருக்கும், அதிகமா சாப்பிட்டாலும் சரில்லை....

போடா உன்னால முடியலைண்ணா விடு....பாரு இவனுங்களை....எப்புடி இருக்கானுங்கண்ணு... அஸ்கர் நீ சொல்லு...

நிறைய வாங்காத தேவைக்கு வாங்கு..ஓ.கே...

ஆமா இவரு பெரிய ஆளு...போடா...கேட்டா பதில் கறெக்டா சொல்லு...

மாப்ள நீ வாங்குடா பாக்கி இருந்தா நாளைக்கு அடிக்கலாம்...

கூட என்ன வேணும்....பெப்ஸி ...7-அப்....மிரண்டா...

எனக்கு 7அப், லேய் வேண்டாம் பெப்ஸிதான் நல்லா இருக்கும்,

எதாவது ஒண்ணு சொல்லுங்கடேய்..எல்லாத்தையும் வாங்கவா முடியும்...

மாப்ள ஒரு சலாட் வாங்கிக்கோ....அது அவனே தருவாண்டா...

அதெப்படிடா... நீ பேசாம வா....முதல்ல உள்ள போய் பார்ப்போம்...

சரி காமில்.. கூட எதாவது வேண்டாமா...

என்ககு வேணாம்... நான் தூங்கீடுவேன்... டேய் எனக்கு....எனக்கும் வேணும்...

சரி பாப்போம்....

மாப்ள உன் மாமா வருவாரா.... வந்தா வெலங்கினமாதிரிதான்... அது நடக்காது...

கடைக்குள் போனார்கள் றஃபீ்க், அஸ்கர், ஷஃபீக். காமில்.

ஆர்டர் கொடுத்தான் காமில்...

2 புள்


means....Hot or normal... hahahaa..cool dear,

ஸ்பைசி or  Normal...

நார்மல் ஓ.கே...

One Full How many person can.??

heai.. up to your cap...

normally how you do for 1 person.

3

I mean 3 pcs Chicken, one glass fountain Pepsi..

1Full How many pieces...??

21 Pieces of Chicken (1 full Bucket) 2 lit. Pepsi or 7Up, 1 Sweet Salad pocket, 250 gram potato chips, khapus...

மாப்ள 2 ஃபுள் வாங்கினா 42 பீஸ் சிக்கன் ஆகிடும், அப்போ எப்புடி..அதான் சொன்னேன் தேவைக்கு வாங்குண்ணு...

அப்படி அன்றைய தினம் இரவு 1 ஃபுள் கெண்டக்கே சிக்கன் மற்றும் 1 ஆஃப் கெண்டக்கே சிக்கன் வாங்கி அனைவரும் சூப்பராக சாப்பிட்டு தூங்கினர்...