பயணம்
********
வீட்டுத்தோட்டம்
வெறித்துப்பாற்கும் - ஒவ்வொரு
முறையும் நான்
வீட்டை விட்டு
வெளியேறும்போதும்.....
வீட்டுப்படியில் கால்
தட்டினால் போதும் - உள்ளே
வந்துட்டு போ மோனே
பயணம் சரியில்லைபோல
என்பாள் என் கிழம்
வாப்பும்மா....
காம்பவுண்ட் கதவையே
நோக்கி நிற்பார் உப்பா - இவ
ஒருத்தி யாராவது வெளியே
போகும்போதுதான் குறை
குடத்தோட வருவா....
எதேச்சையாக என்
கைகளிலிருந்து தவறும்
கார் சாவி பக்கத்து வீட்டு
மாமியை ஏதாவது
பேச வைத்துவி்டும்...
தெருவின் தூரத்து மதிலில்
ஒரு பூனை வலதும் இடதும்
கீழும் பார்த்து நிற்கும் - எனது
கார் சத்தம் கேட்கும்போது
முன்னங்கால்களை கீழ்நோக்கி
வைத்து பயப்படுத்தும்.....
வெள்ளையும் சொள்ளையுமா
காலைலயே எங்கடேய் போறே - கோபத்தின்
நிறம் அப்போதுதான்
இமைகளுக்குள் வெறி பிடித்து
நடனமாடிச்செல்லு்ம்...
நானும் கூட வருவேன்
இல்லைண்ணா முட்டாய்
வாங்கீட்டு வரணும் - மகன்
செல்லமாய் அடம்பிடிக்கக்கூடும்....
அம்மாவின் சேலைக்குள்
முகம்புதைத்து லேசாய்
திரும்பிப்பாற்கும் மகளை
முத்தபிட்டபடி கையசைத்து
வழியனுப்புவாள் மனைவி......
அவள் முகம் பார்த்து திரும்பும்
நொடிப்பொழுதில் சட்டென
கீழிறங்குகிறது சில துளிகள்
பயணத்தின் ஆரம்பம்
அழகான ஆனந்தமாய்.....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...