ஹலோ...ஹலோ...றஃபீக் எங்கடா இருக்க..?
ஹலோ..சொல்லு சொல்லு மச்சான்..என்ன என் விஷயம்...
இல்ல மப்ள இண்ணக்கி வீக் எண்டுல்ல.., மத்தியானமே டியூட்டி முடிஞ்சிடிச்சி..அதான் போண் பண்ணினேன்...நீ ஃபிறீயா...
இல்லடா இன்னும் முடியல, 7:30 ஆயிடும், என்ன விஷயம்...என்னடா மச்சான் சொல்லு...என்ன விஷயம்...
ஒண்ணுமில்லடா நைட் அபுதாபில இருந்து அஸ்கர் வாறேண்ணு சொன்னான்.. அப்புறம் ஷஃபீக் வருவான், அன்சார் மத்தியானமே வந்து என் உயிரை எடுக்கிறான்... நீ வயேன், வந்தா நல்லா இருக்கும், கழிஞ்ச வாரம் நீ ஏமாத்திட்டே...சரி வருவியா மாட்டியா...
நான் டிறை பண்றேன் மாப்ள...இனி வீட்டுக்கு போய், டிறஸ் எல்லாம் கழுவணும், அப்புறம் எத்தனை மணிக்கு புறப்பட்டு எப்போ வர்றது மாப்ள...நான் வரலடா மச்சான்....
என்ன நீ இப்டி சொல்றே..நீ வர்றே... அவ்வலவுதான்...நோ பிராப்ளம் நான் வெயிட் பண்றேன்...
சரி மச்சான், நீ கோபப்படாத, நான் ஒரு 8:30-க்கெல்லாம் வந்துடறேன்...
ஓ.கேடா மாப்ள...
--
வாடா அஸ்கர், சாதனம் வாங்கீட்டு வந்திருவோம்...
என்னது வாங்கணும், எல்லாம்தான் றூம்ல இருக்கே...அதில்லடா இண்ணக்கி கொஞ்சம் நல்லா டிரை பண்ணலாம்ணு பாக்கறேன்...டேய் நீயே கஷ்டப்படுறே இதுல வேற இவ்வளவு செலவு பண்ணவேண்டிய தேவை எதுக்கு...இருக்கிறது போதும், 5 பேர் தானே...
இரவு 9 மணி, றஃபீக் வந்தவுடன் காமில் மகிழச்சியில் சத்தம் போட்டான், இருந்தாலும் உனக்கு பந்தா ஓவர்டா றஃபீக், வாறியாண்ணு கேட்டா வரணும், அதை விட்டுட்டு ரீல் வேற...
வா..வா..
றூமுக்கு போறதுக்கு முன்னால சொல்லு, அவனுங்க ஓ.கே.. உனக்கு என்ன வேணும்...
எல்லாரையும் போல போதும், எனக்குண்ணு ஸ்பெஷியல் எதுதவும் வேண்டாம்...
சரி எவ்வளவு வாங்கலாம்... 1 ஃபுள் போதாது, 2 ஃபுள்...
டேய் மச்சான் என்னடா தேவையில்லாம் காசை கரியாக்குறே... 5 பேருக்கு 1 புள் போதும் கறெக்டா இருக்கும், அதிகமா சாப்பிட்டாலும் சரில்லை....
போடா உன்னால முடியலைண்ணா விடு....பாரு இவனுங்களை....எப்புடி இருக்கானுங்கண்ணு... அஸ்கர் நீ சொல்லு...
நிறைய வாங்காத தேவைக்கு வாங்கு..ஓ.கே...
ஆமா இவரு பெரிய ஆளு...போடா...கேட்டா பதில் கறெக்டா சொல்லு...
மாப்ள நீ வாங்குடா பாக்கி இருந்தா நாளைக்கு அடிக்கலாம்...
கூட என்ன வேணும்....பெப்ஸி ...7-அப்....மிரண்டா...
எனக்கு 7அப், லேய் வேண்டாம் பெப்ஸிதான் நல்லா இருக்கும்,
எதாவது ஒண்ணு சொல்லுங்கடேய்..எல்லாத்தையும் வாங்கவா முடியும்...
மாப்ள ஒரு சலாட் வாங்கிக்கோ....அது அவனே தருவாண்டா...
அதெப்படிடா... நீ பேசாம வா....முதல்ல உள்ள போய் பார்ப்போம்...
சரி காமில்.. கூட எதாவது வேண்டாமா...
என்ககு வேணாம்... நான் தூங்கீடுவேன்... டேய் எனக்கு....எனக்கும் வேணும்...
சரி பாப்போம்....
மாப்ள உன் மாமா வருவாரா.... வந்தா வெலங்கினமாதிரிதான்... அது நடக்காது...
கடைக்குள் போனார்கள் றஃபீ்க், அஸ்கர், ஷஃபீக். காமில்.
ஆர்டர் கொடுத்தான் காமில்...
2 புள்
means....Hot or normal... hahahaa..cool dear,
ஸ்பைசி or Normal...
நார்மல் ஓ.கே...
One Full How many person can.??
heai.. up to your cap...
normally how you do for 1 person.
3
I mean 3 pcs Chicken, one glass fountain Pepsi..
1Full How many pieces...??
21 Pieces of Chicken (1 full Bucket) 2 lit. Pepsi or 7Up, 1 Sweet Salad pocket, 250 gram potato chips, khapus...
மாப்ள 2 ஃபுள் வாங்கினா 42 பீஸ் சிக்கன் ஆகிடும், அப்போ எப்புடி..அதான் சொன்னேன் தேவைக்கு வாங்குண்ணு...
அப்படி அன்றைய தினம் இரவு 1 ஃபுள் கெண்டக்கே சிக்கன் மற்றும் 1 ஆஃப் கெண்டக்கே சிக்கன் வாங்கி அனைவரும் சூப்பராக சாப்பிட்டு தூங்கினர்...
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...