ஒரு வயோதிகத்தாயின் படுக்கையறை
******************************
ஈரெட்டு ஆண்டுகளாய் நான்
தொடர்ந்து படுக்கையில் - எனை
******************************
ஈரெட்டு ஆண்டுகளாய் நான்
தொடர்ந்து படுக்கையில் - எனை
சுமந்து நிற்கும் கட்டிலின்
கால்களுக்கு இதுவரை வலித்ததாய்
சொல்லவில்லை எல்லோரும்
சலித்துக்கொள்வதைப்போல....
நான் விசிறித்தீர்த்த ஒலைக்கீற்றில்
வெறும் ஈற்கல்கள் மட்டுமே - எனினும்
அவை எனக்காய் வசந்தம் வீசுவதை
நிறுத்தவில்லை பலரும்
நிமிடங்களுக்குமேல் இருக்க மறுக்கும்
என் வசந்த அறையில்...
என் கை விரல்களை என்னால்
பார்க்க முடிவதில்லை - ஆயினும்
என் விரல்களில் ஒராயிரம்
நரம்புகள் விரல்களைப்போலவே
வெளித்தெரிகின்றன...
ஆசை மகனுக்கும் வேண்டாம்
பாச மகளுக்கும் வேண்டாம் நான் - ஜடங்களை
வீட்டில் வைத்து யார்
பார்ப்பார் எனும் மருமகளின்
வார்த்தைகள் வாஸ்த்தவம்தானே...
நான் அழுதாலும் யாரும்
அறிவதில்லை -சதா நீர் வடியும்
என் கண்களில் உணர்வுகளுக்கு
நிறமா என்ன....
தலைமுறைகள் கடந்து
அறுபதுக்கும் மேல்
பிறசவம் பார்த்தவள் நான் - என்
பெயர் சொல்லக்கூட நாதியற்ற
பெரும் பேறு கொண்டவளாய்....
எப்போது கூன ஆரம்பித்தேன்
என எனக்கே தெரியவில்லை - இப்போதும்
தளராத மனதில் தயக்கங்களோ
துயரங்களோ இல்லை வெறும்
உடல் வலிமையைத்தவிர.....
எனது விழிகள் இழந்த ஒளியும்
என் காதுகள் இழந்த ஒலியும்
இன்னும் என்னில் பத்திரமாய்
இருக்கிறது பொக்கிஷங்களாய் - யாருமற்ற
என் வாழ்க்கையில் அவ்வப்போது
பார்த்தும் கேட்டும்
அதிசயிக்கத்தான் செய்கிறேன்.....
யாரோ என் அருகில் ஏதோ ஒரு இரவில்
வந்த கனவு பற்றி பேசினர் - வெறும்
கனவுகள் மட்டும் வாழ்க்கையாகிப்போன
எனக்கு வேடிக்கையாகவே போனது....
நான் விளித்திருக்கும்போது யாரும்
என் அருகில் வந்து பார்ப்பதில்லை - நான்
தூங்கும்போதெல்லாம் வந்து செல்பவர்கள்
தொடர்ந்து சொல்லிச்செல்கின்றனர்
"அவங்க தூங்குறாங்க தூங்கட்டும்
அப்புறம் பாக்கலாம்" என்று....
இதுவரை மரணித்த பலரில்
நான் மரணிக்கவில்லையே என
வருத்தம் கண்டவருண்டு - மரணத்தின்
முன்னால் முதுமைக்கு வரையறை
இல்லைபோலும்.....
அவஸ்த்தைகளில் கொடுமை
படுக்கையிலேயே வாழ்க்கை - கொஞ்சம்
அமுதமாய் விஷம் கிடைப்பின்
நான் ஆயுளை முடிக்கலாம் எனினும்
படைத்தவனின் கையில்
பத்திரமாகிப்போன நான்
மரணம் யாசிப்பதென்னவோ தறுதான்...
அபூ ஃபஹத்....
கால்களுக்கு இதுவரை வலித்ததாய்
சொல்லவில்லை எல்லோரும்
சலித்துக்கொள்வதைப்போல....
நான் விசிறித்தீர்த்த ஒலைக்கீற்றில்
வெறும் ஈற்கல்கள் மட்டுமே - எனினும்
அவை எனக்காய் வசந்தம் வீசுவதை
நிறுத்தவில்லை பலரும்
நிமிடங்களுக்குமேல் இருக்க மறுக்கும்
என் வசந்த அறையில்...
என் கை விரல்களை என்னால்
பார்க்க முடிவதில்லை - ஆயினும்
என் விரல்களில் ஒராயிரம்
நரம்புகள் விரல்களைப்போலவே
வெளித்தெரிகின்றன...
ஆசை மகனுக்கும் வேண்டாம்
பாச மகளுக்கும் வேண்டாம் நான் - ஜடங்களை
வீட்டில் வைத்து யார்
பார்ப்பார் எனும் மருமகளின்
வார்த்தைகள் வாஸ்த்தவம்தானே...
நான் அழுதாலும் யாரும்
அறிவதில்லை -சதா நீர் வடியும்
என் கண்களில் உணர்வுகளுக்கு
நிறமா என்ன....
தலைமுறைகள் கடந்து
அறுபதுக்கும் மேல்
பிறசவம் பார்த்தவள் நான் - என்
பெயர் சொல்லக்கூட நாதியற்ற
பெரும் பேறு கொண்டவளாய்....
எப்போது கூன ஆரம்பித்தேன்
என எனக்கே தெரியவில்லை - இப்போதும்
தளராத மனதில் தயக்கங்களோ
துயரங்களோ இல்லை வெறும்
உடல் வலிமையைத்தவிர.....
எனது விழிகள் இழந்த ஒளியும்
என் காதுகள் இழந்த ஒலியும்
இன்னும் என்னில் பத்திரமாய்
இருக்கிறது பொக்கிஷங்களாய் - யாருமற்ற
என் வாழ்க்கையில் அவ்வப்போது
பார்த்தும் கேட்டும்
அதிசயிக்கத்தான் செய்கிறேன்.....
யாரோ என் அருகில் ஏதோ ஒரு இரவில்
வந்த கனவு பற்றி பேசினர் - வெறும்
கனவுகள் மட்டும் வாழ்க்கையாகிப்போன
எனக்கு வேடிக்கையாகவே போனது....
நான் விளித்திருக்கும்போது யாரும்
என் அருகில் வந்து பார்ப்பதில்லை - நான்
தூங்கும்போதெல்லாம் வந்து செல்பவர்கள்
தொடர்ந்து சொல்லிச்செல்கின்றனர்
"அவங்க தூங்குறாங்க தூங்கட்டும்
அப்புறம் பாக்கலாம்" என்று....
இதுவரை மரணித்த பலரில்
நான் மரணிக்கவில்லையே என
வருத்தம் கண்டவருண்டு - மரணத்தின்
முன்னால் முதுமைக்கு வரையறை
இல்லைபோலும்.....
அவஸ்த்தைகளில் கொடுமை
படுக்கையிலேயே வாழ்க்கை - கொஞ்சம்
அமுதமாய் விஷம் கிடைப்பின்
நான் ஆயுளை முடிக்கலாம் எனினும்
படைத்தவனின் கையில்
பத்திரமாகிப்போன நான்
மரணம் யாசிப்பதென்னவோ தறுதான்...
அபூ ஃபஹத்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...