பயண வீடு
*******************
நேத்து வந்தது போல
இருந்தது - இன்னா
ரெண்டு மாசம் ரெண்டு
நாள் போல போய்ட்டுது
உம்மாவின் பொருமல்....
இனி யாராவது
சாமாங்கொண்டு வரவேண்டி
இருக்காடேய் - பெட்டி
கெட்டாண்டாமா
வாப்பா லக்கேஜ் பற்றி பேசினார்....
டிக்கெட் றீ கண்ஃபாம்
பண்ணினியாடே
கழிஞ்ச தடவை போல
அங்க போய் துளாவப்டாது
-பால்ய நண்பன்...
காக்கா..காக்கா
இஞ்ச வாருங்கோ -யாரோ
கடையில் ஆர்டர்
கொடுத்த பரோட்டா
பார்சலுடன் வந்திருந்தனர்...
அயிசாம்மா மாப்பிளக்கி
லெட்டர் உண்டுண்ணு சென்னா
ஃபோண் பண்ணி கேட்டுப்பாரு - உம்மும்மா
டைனிங் டேபிளில்
இருந்துகொண்டு சொன்னாள்...
என்னடா வரும்பளும்
குடுக்கணும் போவும்பளும்
குடுக்கணுமாக்கும் - நடையில்
வந்தவருக்கு காசு கொடுத்ததை
உப்பா கடிந்துகொண்டார்....
வண்டிக்கு சொன்னியா
கறெக்ட்டா வருவானா
சாமமும் தெரியாது
விடியாலமும் தெரியாது
இப்போ உள்ள பயலுவளுக்கு
-எதிர் வீட்டு தாத்தா...
எடுத்து வைத்த புதிய உடைகள்
வந்து சேர்ந்த பொதிகள் என
பெட்டியாக்கப்பட்டபின்னும்
அங்குமிங்குமாக குழப்பத்தோடு
அலைந்துகொண்டே இருந்தான்...
என்னவெல்லாம் மறந்ததோ
என்னவெல்லாம் செய்யணுமோ
எதற்கும் சுய பதில் இல்லை
தூக்கமும் இல்லை
பயணம் மட்டுமே
கண்களில் அவனுக்கு....
விழிகள் ஓயாமல்
நனைந்துகொண்டே இருந்தது
கைகள் கண்ணீரை
துடைத்துக்கொண்டே இருந்தன
கணவனின் கண்களை
நோக்க மறுத்தவளாய் மனைவி..
சில பயணங்கள் இப்படித்தான்
ஒவ்வொரு முறையும்
பிரிவின் ஆற்றாமையை
உணர்த்திக்கொண்டே இருக்கும்....
அபூ ஃபஹத்
*******************
நேத்து வந்தது போல
இருந்தது - இன்னா
ரெண்டு மாசம் ரெண்டு
நாள் போல போய்ட்டுது
உம்மாவின் பொருமல்....
இனி யாராவது
சாமாங்கொண்டு வரவேண்டி
இருக்காடேய் - பெட்டி
கெட்டாண்டாமா
வாப்பா லக்கேஜ் பற்றி பேசினார்....
டிக்கெட் றீ கண்ஃபாம்
பண்ணினியாடே
கழிஞ்ச தடவை போல
அங்க போய் துளாவப்டாது
-பால்ய நண்பன்...
காக்கா..காக்கா
இஞ்ச வாருங்கோ -யாரோ
கடையில் ஆர்டர்
கொடுத்த பரோட்டா
பார்சலுடன் வந்திருந்தனர்...
அயிசாம்மா மாப்பிளக்கி
லெட்டர் உண்டுண்ணு சென்னா
ஃபோண் பண்ணி கேட்டுப்பாரு - உம்மும்மா
டைனிங் டேபிளில்
இருந்துகொண்டு சொன்னாள்...
என்னடா வரும்பளும்
குடுக்கணும் போவும்பளும்
குடுக்கணுமாக்கும் - நடையில்
வந்தவருக்கு காசு கொடுத்ததை
உப்பா கடிந்துகொண்டார்....
வண்டிக்கு சொன்னியா
கறெக்ட்டா வருவானா
சாமமும் தெரியாது
விடியாலமும் தெரியாது
இப்போ உள்ள பயலுவளுக்கு
-எதிர் வீட்டு தாத்தா...
எடுத்து வைத்த புதிய உடைகள்
வந்து சேர்ந்த பொதிகள் என
பெட்டியாக்கப்பட்டபின்னும்
அங்குமிங்குமாக குழப்பத்தோடு
அலைந்துகொண்டே இருந்தான்...
என்னவெல்லாம் மறந்ததோ
என்னவெல்லாம் செய்யணுமோ
எதற்கும் சுய பதில் இல்லை
தூக்கமும் இல்லை
பயணம் மட்டுமே
கண்களில் அவனுக்கு....
விழிகள் ஓயாமல்
நனைந்துகொண்டே இருந்தது
கைகள் கண்ணீரை
துடைத்துக்கொண்டே இருந்தன
கணவனின் கண்களை
நோக்க மறுத்தவளாய் மனைவி..
சில பயணங்கள் இப்படித்தான்
ஒவ்வொரு முறையும்
பிரிவின் ஆற்றாமையை
உணர்த்திக்கொண்டே இருக்கும்....
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...