முகாரி பாடும் முகவரிகள்
******************************
பழைய வீட்டு காதர் குஞ்ஞியின்
மகன் அசன் கண்ணு
காலேஜ்ல படிச்சவன்- பேரு
படிப்புக்கேத்தமாதிரி இல்லைண்ணு
மாத்தியிருக்கானாம் ஹாசன். கே !!.....
சாப்புக்கடை மோலாளி
மைதீங்கண்ணு தம் புள்ளைக்கு
வாப்பாவின் பெயரை வச்சாராம் -மம்மாலி
மம்மாலிண்ணு எல்லாரும் கூப்பிடும்போ
கேவலமா இருக்கும்மா.....
தாத்தா பேரு பேரனுக்கு
கொத்தனார் வெள்ளையன் பெத்த
புள்ளைக்கு கிருட்டினண்ணு
வாய் நெறய கூப்பிட்டாரு - கழிஞ்ச வருஷம்
டாட்டாவுல வேலைண்ணு போனான்
கிருஷ் மட்டும்தான் இப்போ இருக்கு.....
தோப்புக்கடை அடிமைக்கண்ணு மகன்
சேமக்கண்ணுக்கு ரெண்டு பயலுவோ - பேரு வக்க
மறந்திட்டானோ என்னமோ
வாயில நுழையாத தஸ்ஸு
புஸ்ஸுண்ணு கூப்பிடுறான்
வெளிநாட்டில பொறந்ததாதம்.....
தவமிருந்து பெத்த புள்ளைண்ணு
சேசடிமைண்ணு பேரு வச்சார்
தாத்தா குருசு மிக்கேல் - செத்து
பத்து வருஷமாச்சிண்ணாலும்
திட்டுறத நிறுத்தவே இல்லை
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...